ஊராட்சி மன்ற தலைவருக்கு வேட்புமனு தாக்கல் செய்ய ஆடி காரில் திறந்த வெளியில் ஊர்வலமாகச் சென்ற நபர் சற்றே கவனத்தை ஈர்த்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப் பட்டிருந்த நிலையில் கடந்த 9ம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
ஆனால், வழக்குகளால் மந்தமாக இருந்த வேட்புமனு தாக்கல், திட்டமிட்டபடி உள்ளாட்சி மன்ற தேர்தல் நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்ததை யடுத்து விறுவிறுப் படைந்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் போட்டி யிடுபவர்கள் மனுத்தாக்கல் செய்ய வரும் பொழுது தங்களது ஆதரவாளர் களுடன் வித்தியாசமான முறையில் ஊர்வலமாக வந்து மக்களை கவரும் வகையில் வேட்பு மனு தாக்கல் செய்வது வாடிக்கை.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் காரையூரில் காரையூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும் அதே பகுதியை சேர்ந்த எம். இக்பால் என்பவர் வித்தியாச மான முறையில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என எண்ணி
அவரது நண்பரின் விலை உயர்ந்த ஆடி காரில் மேலே உள்ள டாப்பை திறந்து மேலே ஏறி நின்று திறந்த வெளியில் ஊர்வலமாக சென்று பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் காரையூர் கடைவீதி பகுதியில் தேர்தல் அலுவலக த்தையும் அவர் திறந்து வைத்தார்.
விலை உயர்ந்த ஆடி காரில் திறந்த வெளியில் கை யசைத்தப்படி வந்து ஊராட்சி மன்ற தலைவருக்கு வேட்புமனு தாக்கல் செய்தது அனைவரையும் வியக்க வைத்தது.
மேலும் அவர் மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக முன்கூட்டியே பொது மக்களுக்கு தெரியப் படுத்தும் வகையில் உங்கள் வீட்டுப் பிள்ளை இக்பால் என குறிப்பிட்டு
ஒளிமயமான காரையூர் ஊராட்சியை உருவாக்குவோம் என்று வாசகம் அடித்து வேட்புமனு தாக்கல் செய்ய அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள்
என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் எனக்கூறி துண்டுபிரசுரம் வெளி யிட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments