அகதிகளாக இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்கள், உரிய தகுதியை பெறும் போது குடியுரிமை கோரி விண்ணப்பிக்க லாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குடியுரிமை சட்டத்திருத்தம் குறித்து எழுப்பப்படும் கேள்வி களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அதில் இலங்கை தமிழர் நிலை குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள உள்துறை அமைச்சகம், இருநாட்டு பிரதமர்கள் இடையே
1964 மற்றும் 1974-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப் பட்ட ஒப்பந்தப்படி, 4,61,000 இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் வசித்து வரும் 95,000 இலங்கை தமிழர்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
அவர்கள் உரிய தகுதி பெறும் பட்சத்தில், குடியுரிமை கோரி விண்ணப்பிக்க முடியும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 2,00,000 மேற்பட்ட இலங்கை தமிழ் மற்றும் திபெத் அகதிகள் உள்ளதாகவும், குறிப்பிட் டுள்ளது.
இந்த அகதிகள் தங்கள் நாடுகளுக்கு ஒருநாள் திரும்புவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த அகதிகள் தங்கள் நாடுகளுக்கு ஒருநாள் திரும்புவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப் பட்டுள்ளது.
அகதிகள் தொடர்பான 1951-ம் ஆண்டின் ஐ.நா. மாநாட்டு ஒப்பந்தத்திலோ, 1967-ம் ஆண்டின் ஐ.நா. விதிமுறை களிலோ இந்தியா கையெழுத்திடாத தால்,
எத்தனை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும் உள்துறை கூறியுள்ளது.
Thanks for Your Comments