நாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்தாலும் அனல் பறக்கும் அந்தக் களத்தில் அன்பு செய்யவும் சிலர் தயங்க வில்லை.
குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
வன்முறையை நாடுவோர் ஒரு புறமிருக்க அமைதி யாகவும் அன்பாகவும் தங்கள் எண்ணத்தை போராட்டக் களத்தில் சிலர் வெளிப்படுத்தி யதையும் காண முடிந்தது.
டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவி ஒருவர், குண்டு துளைக்காத கவச உடை அணிந்த காவலருக்கு ரோஜாப்பூ கொடுத்த போது காவலர் மலைத்து நின்ற காட்சி இணையத்தில் வெளியாகி அனைவரது இதயத்தையும் துளைத்தது.
டெல்லியில் தங்களை அப்புறப் படுத்த வந்த போலீசார் முன் மாணவர்கள் பூக்களை கையில் ஏந்தி... மண்டியிட்டு... நாங்கள் சண்டைக்கு வரவில்லை.
நீங்களும் எங்களுடன் வாருங்கள் என உருக்கமாக பாடிய காட்சியும் மனதை தைத்தது. பெங்களூரு துணை ஆணையர் சேத்தன் சிங்கின் பாணி வேறுவிதமாக இருந்தது.
பெங்களூருவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்த போது, "என்னை நம்புங்கள்" என உருக்கமாகப் பேசிய சிங், என்னை நம்புவோர் சேர்ந்து பாடலாம் எனக் கூறி
தேசிய கீதத்தை பாட போராட்டக் காரர்களும் அவருடன் சேர்ந்து பாடியதுடன், அமைதியாக கலைந்தும் சென்றனர்.
டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள், தேசிய கீதத்தை பாடத் தொடங்கிய போது போலீசாரும் அமைதியாக நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இது போல் டெல்லியில் ஜூம்மா மசூதி அருகே பாதுகாப்புப் பணிக்குச் சென்ற போலீசாரு க்கும் அப்பகுதியில் இருந்தவர்கள் ரோஜாப்பூ கொடுத்து உபசரித்த காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
போராட்டக் களத்தில் அனல் பறந்தாலும் மாணவர்கள் மற்றும் போலீசாரின் செயல்கள் நெஞ்சைத் தொடுவதாக இருந்தன. பேதங்களை மறந்து அன்பு செய்ய முடியும் என்பதையே இக்காட்சிகள் வலியுறுத்து கின்றன.
Thanks for Your Comments