குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னைப் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், பல்கலைக் கழகத்துக்குள் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப் பட்டுள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி யிலுள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பாண்டிச்சேரி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வளாகத்தில் இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த வெவ்வேறு மொழி பேசும் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.
இந்தநிலையில், சென்னைப் பல்கலைக் கழகத்துக்கு டிசம்பர் 23-ம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்தநிலையில், சென்னைப் பல்கலைக் கழகத்துக்கு டிசம்பர் 23-ம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
பல்கலைக் கழகத்துக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள நிலையிலும் மாணவர்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதனால், ஐம்பதுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் அங்கு குவிக்கப் பட்டுள்ளனர். அதனால், பதற்றம் நிலவுகிறது.
Thanks for Your Comments