ஏமன் நாட்டில் பொது மக்கள் முன்னிலையில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும் வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி யுள்ளது.
மேலும் இந்த வீடியோ துபாயில் எடுக்கப் பட்டதாக வைரல் வீடியோவில் குறிப்பிடப் பட்டுள்ளது.
துபாயிலும் இது போன்ற தண்டனை முறை அமலில் இருப்பதால், சமூக வலைத்தள வாசிகள் இதனை உண்மையென நம்புகின்றனர்.
துபாயிலும் இது போன்ற தண்டனை முறை அமலில் இருப்பதால், சமூக வலைத்தள வாசிகள் இதனை உண்மையென நம்புகின்றனர்.
சில தினங்களு க்கு முன் நாட்டையே பரபரப்பில் ஆழ்த்திய ஐதராபாத் பாலியல் சம்பவத்தை தொடர்ந்து வைரல் வீடியோவில் உள்ளது
போன்ற தண்டனை முறை இந்தியாவி லும் கொண்டு வரப்பட வேண்டும் என சமூக வலைத்தள வாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வைரல் வீடியோவில் பாலியல் குற்ற சம்பவத்தை நிகழ்த்திய நபர், பொது வெளியில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
மேலும் இது போன்ற தண்டனை களுக்கு பெயர்பெற்ற துபாயில் தான் சமீபத்திய வீடியோவும் எடுக்கப் பட்டதாக சமூக வலைத்தள வாசிகள் கருதுகின்றனர்.
உண்மையில் இதுபற்றிய தேடல்களில் ஏமன் நாட்டு தலைநகரான சனாவில் இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதே சம்பவம் பற்றிய ஸ்கிரீன்ஷாட்கள் ஜூலை 2017-ல் பதிவேற்றம் செய்யப்பட்ட மலாய் செய்தியில் பயன் படுத்தப்பட்டு இருக்கிறது.
இது பற்றிய வேறு தகவல்களில் குற்றம் சம்பவம் நடைபெற்ற 15 நிமிடங்களில் தண்டனை நிறைவேற்றப் பட்டதாக கூறப்பட் டுள்ளது.
அந்த வகையில் வைரல் வீடியோ துபாயில் எடுக்கப்பட வில்லை என உறுதியாகி யுள்ளது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத் தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம்.
சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Thanks for Your Comments