குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் என்ற தகவல்கள் பரவியதால் சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு வந்த மக்களை காவல் துறையினர் திருப்பி அனுப்பி யுள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்தப் போராட்டத்தை எதிர்த்து தமிழகத்தி லும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நாளை தி.மு.க சார்பில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டத்து க்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
நாளை தி.மு.க சார்பில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டத்து க்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இந்தநிலையில், இன்று மாலையில் சென்னை யிலுள்ள பெசன்ட் நகரிலுள்ள கடற்கரையில் போராட்டம் நடைபெறவுள்ள தாக தகவல்கள் பரவின.
அதனை யடுத்து, காவல்துறையினர் பெசன்ட் நகருக்கு வந்த பொது மக்களை கடற்கரைக்குள் அனுப்பாமல் திருப்பி அனுப்பினர். ஞாயிற்று கிழமை பெசன்ட் நகர் கடற்கரைக்கு ஏராளமான பொதுமக்கள் வருகை தருவார்கள்.
அவர்களைக் காவல் துறையினர் திருப்பி அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடை யில், சமூக வலை தளங்கள் மூலம் ஒருங்கிணைந்து ஒன்று திரண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
— Akhila Vijayaraghavan (@aksvi) December 22, 2019
Thanks for Your Comments