தமிழக நீதிமன்றங் களில், மாவட்ட நீதிபதி (Entry Level) காலிப்பணி யிடங்களுக் கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகி யுள்ளது.
இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்க ளிடமிருந்து ஆன் லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
பணிகள்:
மாவட்ட நீதிபதி - District Judge (Entry Level)
காலியிடங்கள்:
மொத்தம் = 32 காலியிடங்கள்
முக்கிய தேதிகள்:
அறிவிப்பாணை வெளியான தேதி: 12.12.2019
ஆன் லைனில் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 12.12.2019 (இன்று முதல்)
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.01.2020
வங்கிகள் மூலம் தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 10.01.2020
தேர்வு நடைபெறும் தற்காலிக தேதிகள்:
முதல்நிலை தேர்வு நடைபெறும் தேதி - மார்ச், 2020 (காலை & மதியம்)
முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி - ஜூன் 2ஆவது வாரம், 2020 (காலை & மதியம்)
நேர்காணல் (Viva-Voce) நடைபெறும் தேதி - ஆகஸ்ட், 2020
தேர்வுக் கட்டணம்:
1. பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினர் - ரூ. 2,000
2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத் திறனாளிகள் / விதவைகள் போன்றோரு க்கு தேர்வுக் கட்டணம் கிடையாது.
மாத ஊதியம்:
மாவட்ட நீதிபதி - ரூ.51,550 முதல் ரூ.63,070 வரை
வயது வரம்பு: (01.07.2019 அன்றுக்குள்)
1. பொது பிரிவினர் மற்றும் பிற மாநிலத்தவர்கள் - 35 வயது முதல் 45 வயது வரை
2. எஸ்.சி / எஸ்.டி / ஓபிசி பிரிவினர் - 35 வயது முதல் 48 வயது வரை
கல்வித்தகுதி:
அங்கீகரிக் கப்பட்ட கல்வி நிறுவனத்தில், இளங்கலை சட்டப் படிப்பை பயின்று (டிகிரி) பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
அத்துடன் குறைந்த பட்சமாக 7 வருடங்கள் வழக்கறிஞ ராக பணி புரிந்திருத்தல் அவசியம்.
அத்துடன் குறைந்த பட்சமாக 7 வருடங்கள் வழக்கறிஞ ராக பணி புரிந்திருத்தல் அவசியம்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன் லைனில், www.mhc.tn.gov.in (அல்லது) www.tn.gov.in - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறைகள்:
1. முதல்நிலை தேர்வு
2. முதன்மைத் தேர்வு
3. நேர்காணல் (Viva-Voce)
மேலும், இது குறித்த முழுத் தகவல் களை பெற, www.mhc.tn.gov.in - என்ற இணையதள முகவரிகளில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
Thanks for Your Comments