இளம் பிள்ளைவாதம் நோயை தடுப்பதற்காக நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைக ளுக்கு வழங்கப் படுகிறது.
அரசு சார்பில் இந்த போலியோ சொட்டு மருந்து ஜனவரி, மார்ச் மாதங்களில் இரு தவணை களாக வழங்கப் பட்டு வந்தன.
இந்நிலையில் இந்த ஆண்டு முதல் ஒரே கட்டமாக வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு முதல் ஒரே கட்டமாக வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற் கான தேதி அறிவிக்கப் பட்டுள்ளது.
அதன்படி ஜனவரி 19ஆம் தேதி ஞாயிற்று கிழமை ஒரே தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப் படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில், இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில், 72 லட்சம் குழந்தைக ளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப் பட்டுள்ளது.
அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சுங்கச் சாவடிகள் போன்ற
மக்கள் கூடும் இடங்களில் 50 ஆயிரம் முகாம்கள் அமைக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது. வழக்கமாக 40 ஆயிரம் முகாம்களே அமைக்கப்படும்.
ஆனால் தற்போது ஒரே தவணையில் போலியோ சொட்டு மருந்து வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளதால் விடுபட்டு விடக்கூடாது என்பதற்காக கூடுதலாக 10 ஆயிரம் முகாம்கள் அமைக்கப் படவுள்ளன.
Thanks for Your Comments