ஜெர்மனி நாட்டை சேர்ந்த மாணவர் ஜேக்கப் லின் டென்தல். இவர் சென்னையில் உள்ள உயர் கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி.யில் இயற்பியல் துறையில் படித்து வருகிறார்.
இந்தியாவில் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.ஐ.டி. மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஜெர்மனி மாணவர் ஜேக்கப் லின் டென்தலும் போராட்டத்தில் 1933 முதல் 1945 வரை நாஜி ஜெர்மனியில் நடந்த சித்ரவதையை எடுத்துக் காட்டி
இந்தியாவிலும் அதைப் போல் நடப்பதாக சித்தரித்து பதாகையை ஏந்தி வந்தார்.
இந்தியாவிலும் அதைப் போல் நடப்பதாக சித்தரித்து பதாகையை ஏந்தி வந்தார்.
அவர் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவியது. இதை யடுத்து குடியேற்றத் துறை அதிகாரிகள் ஜேக்கப்பிடம் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணை யின் போது சட்ட ரீதியான ஒரு போராட்டத்தில் அடிப்படை மனித உரிமை களுக்கான போராட்டத்தில் தான் பங்கேற்றேன். இதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பினார்.
மாணவரின் நடவடிக்கை நமது நாட்டின் விசா விதிகளை மீறிய செயலாகும்.
இதை யடுத்து பெங்களூருவில் இருந்து நேற்று சென்னை திரும்பிய அவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றினர்.
இதை யடுத்து பெங்களூருவில் இருந்து நேற்று சென்னை திரும்பிய அவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றினர்.
பத்திரமாக அவரை ஜெர்மனிக்கு அனுப்பி வைத்தனர். அவரது குடியேற்ற உரிமையும் ரத்து செய்யப் பட்டது.
இதுபற்றி ஜேக்கப் கூறுகையில், ‘குடியேற்ற அதிகாரிகள் என்னுடைய அரசியல் சார்பு உள்ளிட்டவை குறித்தும் கேள்வி எழுப்பினர்.
இந்த விசாரணை யின் முடிவில் விசா விதிகளை மீறியதால் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தர விட்டனர். இதை யடுத்து ஜெர்மனிக்கு திரும்புகிறேன்’ என்றார்.
Thanks for Your Comments