பணக்காரர்களை குறி வைத்து தாக்கும் போலி சிபிஐ !

0
வேலூரை அடுத்த காட்பாடி பகுதியில், விருதம்பட்டு காவல் துறையினர் வாகனத் தணிக்கை யில் ஈடுபட்டிருந்தனர். 
போலி சிபிஐ


அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர் களை மடக்கி லைசென்ஸ் உள்ளிட்ட உரிமங்களைக் கேட்டனர். 

இளைஞர்கள், “நாங்க யார் தெரியுமா, சிபிஐ அதிகாரிகள்; எங்க வண்டியையே மடக்குறீயா” என்று கூறி அடையாள அட்டைகளைக் காண்பித்து போலீஸாரை மிரட்டி யிருக்கிறார்கள்.

இரு சக்கர வாகனத்தில் `ஆர்மி’ என்று ஸ்டிக்கர் ஒட்டப் பட்டிருந்ததா லும் அவர்களைப் பார்ப்பதற்கு சி.பி.ஐ அதிகாரி களைப் போன்று தெரியாததாலும் காவல் துறையினர் சந்தேக மடைந்து விசாரணை நடத்தினர். 

அதில், விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த மதீன் (43), கழிஞ்சூர் பன்னீர் செல்வம் தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் (28) ஆகியோர் என்பதும் இருவரும் போலியான சிபிஐ அதிகாரிகள் என்பதும் தெரிய வந்தது.

அவர்களைக் கைதுசெய்த காவல் துறையினர், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணையைத் தொடங்கினர். 


இது பற்றி, காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி, `கைது செய்யப்பட்ட மதீன், சதுப்பேரி பகுதியில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் கேன்டின் வைத்துள்ளார். 

அவரிடம், ஹரிஹரன் 4 ஆண்டுகளாக வேலை செய்கிறார். இரண்டு பேருமே வசதியானவர் களிடமிருந்து பணம் பறிக்கத் திட்ட மிட்டனர்.

வாட்ட சாட்டமாக இருப்பதால், தங்களை ஐபிஎஸ் ஆபீஸர் என்று கூறிக் காவல் சீருடையில் இருப்பதைப் போன்ற படங்களை ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். 

மேலும், சிபிஐயில் ஹரிஹரன் உதவி ஆணைய ராகவும் மதீன் உதவி ஆய்வாள ராகவும் பணி புரிவதாக அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்துள்ளனர். 

மிடுக்கான தோற்றத்துடன் பணக்காரர்கள் தொழிலதிபர் களின் வீடுகளுக்கு ரெய்டுக்குச் சென்றுள்ளனர். இவர்களை சி.பி.ஐ அதிகாரிகள் என்று நம்பி பலரும் பயந்துபோய் பணம் கொடுத்து அனுப்பி யுள்ளனர். 
பணக்காரர்களை குறி வைக்கும் சிபிஐ


சமீபத்தில், வட்டார போக்குவரத்து அலுவலர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

இவர்கள் சென்ற வாகனத்தை மடக்கி உரிமங்களைக் கேட்ட போது அவரையே மிரட்டி யிருக்கிறார்கள். 

சி.பி.ஐ அதிகாரிகள் என்று போலியாக தயாரித்து வைத்திருந்த அடையாள அட்டைகளைப் பறிமுதல் செய்துள்ளோம்.

இவர்களின் பின்னால் இன்னும் சிலர் இருப்பதா கவும் தெரிய வந்துள்ளது. விருதம்பட்டு பகுதியில் இரண்டு பேரும் தங்கியிருந்த வீட்டில்

சோதனை நடத்தியதில் காவல் சீருடைகள், ரூ.4.70 லட்சம் பணத்தைக் கைப்பற்றி யுள்ளோம். அதைத் தவிர, முக்கிய ஆவணங்களும் சிக்கி யிருக்கின்றன. 

கார், பைக் என வாழ்க்கையை உல்லாசமாக அனுபவித்து வந்துள்ளனர். இவர்களால் பாதிக்கப் பட்டவர்கள் யார் யாரென்றும் விசாரணை நடத்தி வருகிறோம். 

பாதிக்கப் பட்டவர்கள் தைரியமாக வந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க லாம்” என்று கூறியுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings