500 உயிரினங்களின் முதல் மூளை அருங்காட்சியகம் !

0
மூளை தான் செயல் பாடுகளின் முதன்மை. அதன் வேலைபாடுகள் பிரமிப்பின் உச்சம். மூளை குறித்த தகவல்களை கேட்டது, 
500 உயிரினங்களின் மூளை


கற்றறிந்தது மட்டுமன்றி கண்கூடே காணவும் உருவாக்கப் பட்டது தான் நிமான்ஸ் (NIMHANS) என்கிற இந்தியாவின் முதல் மூளைக்கான அருங்காட்சியகம். இது பெங்களூரில் அமைந்துள்ளது.

அறிவியல் ஆராய்சி யாளர்கள் மட்டும் தான் இங்கு செல்ல வேண்டும் என்றில்லை. யார் வேண்டு மானாலும் செல்லலாம். அவற்றை தொட்டும் பார்க்கலாம்.

இங்கு மனித மூளை மட்டுமன்றி, விலங்குகள் பறவைகளின் மூளைகள் என 500 வகையான மூளைகளை காட்சிக்கு வைத்துள்ளனர். இந்த மூளைகள் கிட்டத்தட்ட 30 வருடங்களாக சேகரித்து அருங்காட்சியகம் உருக்காப் பட்டுள்ளது.
மூளை அருங்காட்சியகம்


இந்த அருங்காட்சி யகத்தை பேராசிரியர் மூளை வல்லுநர், மருத்துவர் எஸ்.கே .சங்கர் தலைமை யிலான குழு அமைத்துள்ளது.

இவர்களின் ஆராய்ச்சிக் காக மூளைகளை தானமாகப் பெற்று சேகரித்து வந்துள்ளனர்.

பின் மாணவர்களின் கல்விப் பயன்பாட்டிற் காக வைத்துள்ளனர்.

அதன் பிறகே மக்கள் கண்டு தெரிந்து கொள்ளவும்.. இப்படி உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கவும் இந்த அருங்காட்சி யகத்தை திறந்துள்ளார். 

இங்கு கோழியின் மூளை, வாத்து மூளை, எலி, பசு மாட்டு மூளை என அதிசயிக்கத்தக்க வகையிலான மூளை வகைகளைக் காண முடியும்.

அதே போல் மனித மூளையில் அது எப்படி வளர்ச்சி யடைந்து முழுமைப் பெறுகிறது என்கிற ஒவ்வொரு படிநிலைக் கொண்ட மூளைகளை யும் இங்கு வைத்துள்ளனர். 


அடுத்ததாக வளர்ச்சி யின்மைக் கொண்ட மூளையின் அமைப்பு எப்படி இருக்கும்,

மூளை நோய்கள் தாக்கிய மூளைகள் எப்படி இருக்கும் இப்படி ஆச்சரியத்தில் ஆழ்த்தக் கூடிய அனைத்து வகையான மூளைகளையும் காணலாம்.

இங்கு ஒரு முறை சென்று வந்தால் நிச்சயம் மூளை பற்றி தெரிந்து கொள்வது மட்டுமன்றி அதன் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வும் ஏற்படும் . 

அந்த அனுபவத்தை பெற நிச்சயம் செல்லுங்கள். காலை 10 முதல் மாலை 3 மணி வரை இலவச அனுமதி உண்டு.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings