மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் (Citizenship Amendment Act) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுடன் அமலுக்கு வந்துள்ளது.
இந்த சட்டத்தின் படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருகை தரும்
இந்துக்கள், புத்தர்கள், பார்சிக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஜெயின்கள் ஆகியோர் சட்ட விரோத குடியேறிகளாக கருதப்பட மாட்டார்கள்.
இவர்கள் டிசம்பர் 31, 2014க்கு முன்பாக இந்தியாவில் குடியேறி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.
இது தொடர்பான கணக்கெடுப்பு அடுத்த ஓராண்டிற்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை யடுத்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக டெல்லியில் நடந்து வரும் போராட்டங்கள் மிகுந்த கவனம் பெற்றுள்ளன.
போராட்டக் காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு, தடியடி, துப்பாக்கிச்சூடு போன்றவற்றில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக நேற்று கண்டன ஆர்ப்பாட்டங் களை நடத்தியது.
காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை யில் போராட்டம் நடந்தது.
காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை யில் போராட்டம் நடந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று திமுக தலைமைகள் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளும் அனைத்துக் கட்சி கூட்டம் நடக்க உள்ளது.
இதில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இந்த சட்டத்தில் இடம் பெற்றுள்ள சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்ய இருக்கின்றனர். இதில் மதிமுக, விசிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கக் கூடும்.
இந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடி பிரம்மாண்ட பேரணி நடத்த திட்ட மிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Thanks for Your Comments