பண்டல் பண்டலாக சிக்கிய கஞ்சா... அதிரடி சோதனையில் அதிர வைக்கும் சம்பவங்கள் !

0
சென்னையில் கடந்த ஓராண்டாக போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்திருப்ப தாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கவலை தெரிவித்துள்ளனர். 
பண்டல் பண்டலாக சிக்கிய கஞ்சா


கடந்த ஒரு மாதத்தில் மட்டும் போலீசார் மேற்கொண்ட தீவிர வேட்டையில் பண்டல் பண்டலாக கஞ்சா சிக்கி யுள்ளது.

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் சுற்று வட்டாரங்களில் கடந்த சில நாட்களில் போதைத் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனைகளில் பல கிலோ கஞ்சா மற்றும் பல்வேறு விதமான போதைப் பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளன.

கடந்த 11ம் தேதி சென்னை ரெட்டேரியில், கஞ்சா பதுக்கி வைக்கப் பட்டிருப்பதாக போதைப் பொருள் தடுப்பு போலீசாரு க்குத் தகவல் கிடைத்ததை அடுத்து, 

ரெட்டேரி எம் ஜி ஆர் நகர் 2 வது தெருவில் ஒரு வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை யிட்டனர்.

ஆந்திர மாநில போலி பதிவெண் கொண்ட அந்த வாகனத்தில் சர்க்கரை வள்ளிக் கிழங்குடன் 210 கிலோ கஞ்சா பொட்டலங்களும் பதுக்கி வைக்கப் பட்டிருந்தது தெரிய வந்தது

வாகனத்தை ஓட்டி வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன், ஏற்கனவே போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கடந்த ஓராண்டாகத் தேடப்பட்டு வந்த நிலையில் இந்த முறை சிக்கி கொண்டார்

ஆந்திரா - ஒடிசா மாநிலங்களின் எல்லையில் இரு்நது கொண்டு வரப்பட்ட இந்த கஞ்சா பொட்டலங்கள், சென்னையில் விநியோகம் செய்யப்பட்ட பின் மீதம் இருந்தவை என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. 

கடந்த 13ம் தேதி சென்னை மண்ணடி ஐயப்ப செட்டி தெருவில் உள்ள தனியார் லாட்ஜில் கஞ்சா பதுக்கி வைத்திருப்ப தாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

போலீசார் அந்த விடுதியில் மேற்கொண்ட சோதனையில், 16 பண்டல்கள் கஞ்சா சிக்கியது. 

கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த வட மாநிலங்களைச் சேர்ந்த அன்வர் பாட்ஷா, சிக்கந்தர் பாட்ஷா,

குர்ஷத் அலாம், அன்வர் ஹுசைன், ரொபிகுல் இஸ்லாம், ரபீக் ஆகியோர் கைது செய்யப் பட்டனர்.

பின்னர் இவர்களிடம் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட அன்வர் பாட்ஷா என்பவர்

கடந்த 20 தினங்களுக்கு முன்பு 8 கிலோ கஞ்சா பதுக்கி யிருந்த காரணத்திற் காக வேலூர் சிறைக்கு சென்றுவிட்டு 12ம் தேதி ஜாமினில் வெளியே வந்தது தெரிய வந்தது

இவர்கள் தங்கி இருந்த விடுதியில், ரசல் மியா மற்றும் சைபுன் ஆகியோர் பெயரில் அறை பதிவு செய்யப் பட்டிருந்தது. 

மேலும் ரசல்மியா என்பவர் வேலை வாங்கி தருவதாக கூறி இவர்களை அழைத்து வந்ததும் தெரியவந்தது தலைமறை வான இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


சென்னை பெரும்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு களில் இருந்து பல இடங்களு க்கு கஞ்சா விநியோகிக்கப் படுவதாக கடந்த 16ம் தேதி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

போலீசாரின் தேடுதல் வேட்டையில், 28 வயதான வீரமருது சிக்கினார்; அவரது தகவல்களின் அடிப்படை யில், 27 வயதான சுபாஷ் மற்றும் சந்தோஷ் ஆகியோர் சிக்கினர். 

அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 800 கிராம் கஞ்சா, கத்திகள் ஆகியவை பறிமுதல் செய்யப் பட்டன. இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த பார்வதி என்பவர் கைது செய்யப் பட்டார். 

அவரிடம் இருந்து 11 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டது. இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணயைி ல் கண்ணகி நகரைச் சேர்ந்த செங்கா என்பவர் தான் இவர்களுக்கு கஞ்சா விற்று வந்தது தெரிய வந்தது. 

இதை யடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 20ம் தேதி காலை அம்பத்தூர் கலைவாணர் நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்த போது 

சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்களைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 46 வயதான சுபே சவுத்ரி என்பதும் 

மற்ற இரண்டு பேரும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 22 வயதான மகேஷ் மற்றும் 22 வயதான சுவர்ண் வேலாயுதம் என்றும் தெரிய வந்தது.

வடமாநிலத்தை சேர்ந்த சுபே சவுத்ரி அம்பத்தூர் அருகே உள்ள அயப்பாக்கத்தில் டீக்கடை நடத்தி வந்துள்ளார். அந்தக் கடைக்கு சென்று வந்ததில் சுபே சவுத்ரியுடன் மகேஷ், சுவர்ண வேலாயுதம் ஆகியோரு க்கு நட்பு ஏற்பட்டுள்ளது

மகேஷ், சுவர்ண வேலாயுதம் இருவரும் வேலை யில்லாமல் திரிந்துள்ளனர், சுபே சவுத்ரிக்கு டீக்கடையில் இருந்து போதிய வருமானம் கிடைக்க வில்லை. இதனால் பெற்றோருக்கு பணம் அனுப்ப இயலாமல் திண்டாடி யுள்ளனர். 

இதையடுத்து மூன்று பேரும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து அவற்றை சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து இருசக்கர வாகனத்தில் சென்று கல்லூரி மாணவர் களிடம் விற்பனை செய்துள்ளனர்

இவர்களிடம் இருந்து ஒருகிலோ 800 கிராம் கஞ்சாவையும் 17 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் போலீஸார் கைப்பற்றினர்.

இவர்களைப் போல் வடபழனியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்று வந்த மாற்றுத் திறனாளி தயாளன் என்பவரும் கைது செய்யப் பட்டார். அவரிடம் இருந்து 820 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டது


ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து ரயில் மூலமாக கஞ்சா கொண்டு வரப்படுவ தாக போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு சனிக்கிழமை ரகசிய தகவல் வந்தது.

அதன் அடிப்படையில், எழும்பூர் ரயில் நிலையத்தில் போலீசார் ரயிலில் சோதனை செய்த போது 4 பேரிடம் இருந்து, 54 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டது.

விசாரணையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான ராமராஜ்., 24 வயதான பிரகாஷ், 22 வயதான யுவராஜ், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான ராம்குமார் எனத் தெரிய வந்தது

இவர்கள் காக்கிநாடாவில் இருந்து கஞ்சாவை வாங்கிவந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்ய திட்ட மிட்டிருந்ததும் தெரிய வந்தது. 

ஆந்திரா - ஒடிசா எல்லையில் கஞ்சா பயிரிடப்பட்டு அங்கிருந்து தமிழகத்திற்கு விநியோகம் செய்யப் படுவதாக தெரிவிக்கிறார் போதைத் தடுப்புப் பொருள் பிரிவு சென்னை மண்டல இயக்குநர் புருனோ.

சென்னையில் கடந்த ஓராண்டாக கஞ்சா மட்டுமின்றி பல்வேறு விதமான போதைப் பொருட்கள் நடமாட்டமும் அதிகரித் துள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் 300 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. 

பலர் கைது செய்யப் பட்டடுள்ளனர். தங்களின் கஞ்சா அதிரடி வேட்டை தொடரும் என்கின்றனர் போலீசார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings