தங்க நகைகளுக்கு வரும் 2021-ம் ஆண்டு ஜனவரி 15-ந் தேதி முதல் ‘ஹால்மார்க்’ முத்திரை கட்டாயம் ஆகிறது என்ற அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.
இது குறித்து நுகர்வோர் விவகாரங்கள் துறை முறையான அறிவிக்கையை
அடுத்த ஆண்டு ஜனவரி 15-ந் தேதி வெளியிடும் என அந்த துறைக்கான மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.
தங்களிடம் இருப்பில் உள்ள நகைகளை விற்று தீர்த்து கொள்வதற்காக த்தான் ஓராண்டு கால அவகாசம் தரப்படுகிறது.
அறிவிக்கை வெளியாகி ஓராண்டில் ‘ஹால்மார்க்’ முத்திரை தங்க நகைகளில் பதிப்பது நடைமுறைக்கு வந்து விடும்.
தங்க நகைகளின் சுத்த தன்மையை சான்றளிப்பது தான் ‘ஹால்மார்க்’ முத்திரை. இது தேசிய தர மதிப்பு நிறுவனத்தால் வழங்கப் படுகிறது.
ஹால்மார்க் முத்திரை 4 முத்திரைகளை கொண்டது. அவை பி.ஐ.எஸ். முத்திரை, தங்கத்தின் சுத்த தன்மையை குறிக்கும் முத்திரை, ஹால்மார்க் மையத்தின் முத்திரை, நகைக் கடையின் முத்திரை ஆகியவை ஆகும்.
Thanks for Your Comments