பிரதமர் மோடி உணவு உண்பது போன்ற புகைப்படம் உண்மையா?

0
பிரதமர் நரேந்திர மோடி உணவு உண்பது போன்ற புகைப்படமும், பெண்மணி ஒருவர் பசியில் வாடும் தனது குழந்தையுடன் அமர்ந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைத் தளங்களில் வைரலாகி யுள்ளது. 
பிரதமர் மோடி புகைப்படம் உண்மையா?


இதில் குழந்தையுடன் அமர்ந்து இருக்கும் பெண் இந்தியாவை சேர்ந்தவர் என கூறப்பட் டுள்ளது.

இந்த புகைப்படம் ஞானமுள்ளவர் களுக்கு ஆயிரம் அர்த்தங்களை கொடுக்கும் எனும் தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப் பட்டுள்ளது. 

இதனை இதுவரை பல்லாயிரக் கணக்கானோர் உண்மையென நம்பி பகிர்ந்துள்ளனர்.

புகைப் படத்தை ஆய்வு செய்ததில், பிரதமர் மோடியின் புகைப்படம் போட்டோஷாப் மூலம் மாற்றப்பட்டு இருப்பதும் 

மற்றொரு புகைப்படத்தில் குழந்தையுடன் அமர்ந்து இருக்கும் பெண் ஆப்ரிக்காவை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

எனினும், புகைப்படம் உண்மையென நம்பியவர்கள் பிரதமர் மோடியை சாடும் வகையிலான கருத்துக் களை பதிவிட்டுள்ளனர். இரண்டு புகைப் படங்களையும் தனித்தனியே தேடியதில் உண்மை விவரம் வெளியானது. 

அதன்படி பிரதமர் மோடியின் புகைப்படம் நவம்பர் 12, 2008-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் காந்தி நகர் செய்தி யாளர்கள் சார்பில் வழங்கப்பட்ட தீபாவளி விருந்தின் போது எடுக்கப் பட்டதாகும். 

இதன் உண்மை புகைப் படத்தில் பிரதமர் உட்கொள்ளும் உணவு வகைகள் குறைவாகவே இருக்கிறது.


மற்றொரு புகைப் படத்தில் இருக்கும் பெண்மணி இந்தியாவை சேர்ந்தவர் என பலரும் நம்பிய நிலையில், இந்த பெண் ஆப்ரிக்காவை சேர்ந்தவர் என உறுதியாகி யுள்ளது. 

இந்த புகைப்படத்தை டேவிட் டன்லி என்பவர் 1992-ம் ஆண்டு எடுத்திருக் கிறார். அந்த வகையில் வைரல் புகைப்படம் முற்றிலும் பொய் என உறுதியாகி விட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத் தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். 

சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings