அதிமுக அரசு சிறுபான்மை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதனால், பொதுமக்கள் தவறான பிரசாரங்க ளுக்கு செவிமடுக்காமல் அமைதி காக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
குடியுரிமை சட்டத்திருத்தத் திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாடாளுமன்ற த்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக அரசைக் கண்டித்தும் திமுக தோழமை கட்சிகள்,
இஸ்லாமியர் மற்றும் மாணவர் அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட் டுள்ளார்.
அதில், அதிமுக அரசு சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் பெரிய அரணாக விளங்கி வருவதாகவும், இந்த அரசு எந்த காலத்திலும் சிறுபான்மை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பதில் தொடர்ந்து உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட் டுள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தால் இந்திய மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றபோதிலும், சிலர் தொடர்ச்சியாக இஸ்லாமிய சகோதரர்க ளிடையே அவர்களது குடியுரிமை பாதிக்கப்படும் என வதந்தி பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக, இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,
அதிமுக அரசு சிறுபான்மை யினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் நலனிலும், முன்னேற்றத் திலும் பாதுகாப்பிலும் அக்கறையோடு தொடர்ந்து செயல்பட்டு வருவதால்,
பொதுமக்கள் தவறான பிரசாரங்க ளுக்கு செவி சாய்க்காமல் அமைதி காக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுளார்.
அத்துடன், அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தில், பொது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி,
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தி யுள்ளார்... news18
Thanks for Your Comments