நள்ளிரவில் சூரியன் தெரியுமா? என்னங்க ஒளறிட்டு இருக்கீங்க.. சூரியன் இல்லாம போனாதான அது இரவுனு சொல்வாங்கனு நீங்க வாய்விட்டு கேக்குறது நல்லா தெரியுது.
ஆனா நிஜமாவே நள்ளிரவில் சூரியன் ஒளி வீசும் பல இடங்கள் இருக்கு. நீங்க நம்பலல... இதோ இந்த படங்கள பாத்துட்டு வாங்க.
நார்வே
நார்வே நாட்டின் அட்லா பகுதியில் நள்ளிரவு நேரத்தில் சூரிய வெளிச்சம் வீசும் ஒரு அழகிய ஏரியும், மலையும் காண்கிறோம்
நள்ளிரவு சூரியன்
நார்வே நாட்டின் மகேரோயா தீவில் வடக்கு கேப் பகுதியில் காணும் சூரிய கதிர்கள். ஆம் இது நள்ளிரவில் எடுக்கப்பட்ட புகைப்படம்
கிரீன்லாந்து பகுதியில் நள்ளிரவு சூரியன்
கிரீன்லாந்து பகுதியில் எடுக்கப்பட்ட நள்ளிரவு சூரியன் புகைப்படம். அட.. என்ன இது.. ஏதேனும் ஏமாற்று வேலையா என எண்ணி விடாதீர்கள்.
இந்த இடங்கள் பூமியில் அமைந்துள்ள இடத்தைப் பொறுத்து சூரியன் நள்ளிரவு வரை மாறாமல் இருக்கிறது.
வாருங்கள் உலகில் இது போன்று நள்ளிரவு வரை சூரியன் மறையாமல் இருக்கும் இடங்களைப் பற்றி இந்த கட்டுரையில் காண்போம் வாருங்கள்.
வாருங்கள் உலகில் இது போன்று நள்ளிரவு வரை சூரியன் மறையாமல் இருக்கும் இடங்களைப் பற்றி இந்த கட்டுரையில் காண்போம் வாருங்கள்.
நார்வே
ஐரோப்பிய கண்டத்தில் ஸ்காண்டிநேவிய தீபகற்பத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அழகிய தேசம் ஆகும். இந்த நாடு ஆர்க்டிக் பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ள தால் இங்கு ஒரு சிறப்பு வாய்ந்த நிகழ்வு நடக்கிறது.
அது நள்ளிரவு நேரத்திலும் சூரிய ஒளி இந்த நாட்டின் நிலப்பகுதியில் விழுவதுதான். ஒரு நாளைக்கு சுமார் 20 மணி நேரம் வரை சூரிய ஒளி பிரகாசமாக இங்கு வீசுகிறது.
குறிப்பாக, அங்குள்ள நார்த் ஆர்டிக் பகுதிகளில் இந்த அதிசய நிகழ்வைக் காண முடியும்.

நார்வே சுற்றுலா
நார்வேயில் உப்பு நீர் ஏரிகளும், மலைகளும் மிக முக்கிய சுற்றுலாத் தளங்களாக அமைந்துள்ளன. இங்குள்ள கடற்கரைகள் உலகின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக இடம் பெறுகின்றன.
நான்கில் ஒரு பங்கு காடுகளைக் கொண்ட இதன் மொத்த நிலப்பரப்பு இங்கு போதுமான அளவு மழை வளத்தை அளிக்கிறது.
நான்கில் ஒரு பங்கு காடுகளைக் கொண்ட இதன் மொத்த நிலப்பரப்பு இங்கு போதுமான அளவு மழை வளத்தை அளிக்கிறது.
நார்வே சிறப்புகள்
நார்வே நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு என்ற பெயர் பெற்றது. உலகிலேயே கடல் நீர் ஏரிகள் அதிகம் கொண்ட நாடு இது.
பூமியின் வட முனையில் சூரிய ஒளியை பார்த்து ரசிக்கும் அழகிய நாடுகளில் முதன்மை யானது
ஐஸ்லாந்து
ஐஸ்லாந்து நாடு மிக வித்தியாசமான நில அமைப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. எந்த பக்கம் திரும்பினாலும் அழகிய நீர் வீழ்ச்சிகளும்,
எரிமலைகளும், பனிப் பாறைகளும் என சுற்றுலாவுக்கு சிறந்த பல இடங்களைக் கொண்டுள்ளது. கூடவே வெந்நீர் ஊற்றுகளையும் கொண்ட அழகிய தேசம் ஆகும்
எரிமலைகளும், பனிப் பாறைகளும் என சுற்றுலாவுக்கு சிறந்த பல இடங்களைக் கொண்டுள்ளது. கூடவே வெந்நீர் ஊற்றுகளையும் கொண்ட அழகிய தேசம் ஆகும்
ஐஸ்லாந்து சுற்றுலா
வடக்கு அட்லான்டிக் பகுதியில் அமைந்துள்ள ஐஸ்லாந்தில் பல அழகிய சுற்றுலாத் தளங்கள் உள்ளன. சுவ்ரேய்ரி, நோரோஃப்ஜூரூர், லவ்கேவேகூர் உள்ளிட்ட பல இடங்கள் இங்கு முக்கியமானவை.
ஐஸ்லாந்து சிறப்புகள்
ஐஸ்லாந்தில் பல சிறப்புகள் உள்ளன. அதிலும் முக்கியமான சிறப்பு என்ன வென்றால் அது குதிரைச் சவாரியும், கோல்ஃப் பயிற்சியும் தான்.
அட இதில் என்ன சிறப்பு இருக்கிறது. எல்லா நாடுகளிலும் இவை இருக்கின்றனவே என்று யோசிக்கிறீர்களா? இவை அனைத்தும் நள்ளிரவில் மேற்கொள்ளப் படும்.
அட இதில் என்ன சிறப்பு இருக்கிறது. எல்லா நாடுகளிலும் இவை இருக்கின்றனவே என்று யோசிக்கிறீர்களா? இவை அனைத்தும் நள்ளிரவில் மேற்கொள்ளப் படும்.
அட... அதான் நள்ளிரவில் சூரிய வெளிச்சம் இருக்கும்னு சொல்லிட்டோம்ல.. கரண்ட் பில்ல பத்தி ஏன் கவலப் பட்டுட்டு.
கனடா
கனடா பகுதியும் கிட்டத்தட்ட பூமியின் வட அரைக் கோளத்தில் அமைந்துள்ளவை தான். இந்த நாட்டின் வடகிழக்கு மாகாணங்கள் பல சூரியனின் பார்வையை அதிக நாட்கள் தாங்கும் வகையில் அமைந்துள்ளன.
கோடைக் காலத்தில் 50 நாட்கள் வரை தொடர்ந்து இந்த பகுதிகளில் பகலாகவே காட்சி தருமாம்.
கனடா சுற்றுலா
கனடா நாடு பல அழகிய சுற்றுலாத் தளங்களை கொண்டுள்ளது நாம் அறிந்ததே.
மாண்ட்ரியல், டோரன்டோ, பாங்க்ஃ, வான்கோவ்ர் உள்ளிட்ட இடங்களுக்கு இந்தியாவி லிருந்து பல சுற்றுலா பயணிகள் சென்று வந்த வண்ணம் இருக்கிறார்கள்.
மாண்ட்ரியல், டோரன்டோ, பாங்க்ஃ, வான்கோவ்ர் உள்ளிட்ட இடங்களுக்கு இந்தியாவி லிருந்து பல சுற்றுலா பயணிகள் சென்று வந்த வண்ணம் இருக்கிறார்கள்.
கனடா சிறப்புகள்
இரவு நேரங்களில் மீன் பிடித்தல், வேட்டையாடுதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் அந்நாட்டு மக்கள் அதிகம் பங்கேற்கிறார்கள்.
குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் வடக்கு மாகாணங்களில் கலை விழாக்கள் நடக்கும். அதில் வித்தியாசமான விளையாட்டுகளும் போட்டிகளும் இருக்கும்.
குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் வடக்கு மாகாணங்களில் கலை விழாக்கள் நடக்கும். அதில் வித்தியாசமான விளையாட்டுகளும் போட்டிகளும் இருக்கும்.
நள்ளிரவானாலும் சரி அந்த சமயத்திலும் சூரிய ஒளி நாட்டில் படுவதால், பகல் போலத்தான் காட்சி யளிக்குமாம்.
சுவீடன்
சுவீடனுக்கு செல்ல திட்டமிடுகிறீர்களா? எப்போது சென்றாலும், சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் பகுதிகளில், நீங்கள் இரவு நேரங்களில் சூரியனை காணலாம்.
உங்கள் வெறும் கண்களால் சூரியனை ரசிக்க முடியும் அளவுக்கு சூரியன் மறையும் ஒரு சில நிமிடங்கள் இருக்கும். சுவீடனின் தலைநகர் பகுதியில் சூரியன் நடு ராத்திரியில் மறைந்து அதிகாலை 3 மணிக்கு திரும்பவும் உதித்து விடும்.

சுவீடன் சுற்றுலா
சுவீடன் நாடும் பல அழகிய சுற்றுலாத் தளங்களை கொண்டது தான். ஸ்டாக்ஹோல்ம், கோதன்பர்க், கிருனா, விஸ்பி உள்ளிட்ட பகுதிகள் உலகம் முழுக்க இருந்தும் மக்கள் சுற்றுலாவுக்கு வருகை தரும் இடங்களாகும்.
சுவீடன் சிறப்புகள்
குறைந்தது 21 மணிநேரம் அங்கு பகலாகவே இருக்கிறது. ஸ்டாக்ஹோம் 30 சதவீதம் வரை நீர்வழித் தடங்களைக் கொண்டது. இது 14 தீவுகளை உள்ளடக்கியது.
பின்லாந்து
எப்போதும் விளையாட்டும் கொண்டாட்டங்களும் நிறைந்த நாடு பின்லாந்து. இங்கு நடு ராத்திரியின் சூரிய வெளிச்சத்தில் தான், பெரும்பாலான கொண்டாட்டங்கள் அமைந்திருக்கும்.
பின்லாந்து சுற்றுலா
ஹெல்சின்கி, ரோவானிம்மி, துர்க்கு, சாரைஸ்ல்கா உள்ளிட்ட இடங்கள் இந்த நாட்டின் முக்கிய சுற்றுலாத் தளங்களாகும்.
பின்லாந்து சிறப்புகள்
Thanks for Your Comments