லேண்டரை கண்டுபிடித்தவரை நேரில் சந்தித்து கமல் வாழ்த்து !

0
சந்திரயான்2 விண்கலம் மூலம் நிலவின் தென் துருவத்தை ஆராய இஸ்ரோ சார்பில் விக்ரம் லேண்டர்‌ அனுப்பப் பட்டது.
லேண்டரை கண்டுபிடித்தவரை சந்தித்த கமல்


ஆனால் அது நிலவில் தரைஇறங்க 2 கிலோ மீட்டர் தொலைவே இருந்த நிலையில், லேண்டருடன் தொடர்பு துண்டிக்கப் பட்டது.

இதனை யடுத்து விக்ரம் லேண்டர் குறித்த எந்த தகவலும் இஸ்ரோவுக்கு கிடைக்க வில்லை.

பல்வேறு முயற்சிகளு க்கு பின், விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடிய வில்லை என இஸ்ரோ அறிவித்தது. 

இதனை தொடர்ந்து இஸ்ரோ, நாசாவுடன் இணைந்து விக்ரம் லேண்டரை தேட தொடங்கியது. இந்தநிலையில் விக்ரம் லேண்டரின் பாகங்கள் கண்டுபிடித்து புகைப்படங்கள் வெளியிடப் பட்டன. 

இதற்கு மதுரையை சேர்ந்த என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன் தான் நாசாவுக்கு உதவினார் என்பது தெரிய வந்தது.

இதனை நாசாவின் எல்.ஆர்.ஓ. ஆர்பிட்டர் கேமரா விஞ்ஞானிகள் குழு ஆராய்ந்து சண்முக சுப்பிர மணியனின் கண்டுபிடிப்பு சரிதான் என உறுதி செய்தது. 


சண்முக சுப்பிரமணியன் கண்டு பிடித்துள்ள விக்ரம் லேண்டர் சிதைவு இடங்கள் ஆகிய வற்றை காட்டும் படத்தையும் நாசா வெளியிட்டது.

சந்திரயான்2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய மதுரையை சேர்ந்த சண்முக சுப்பிர மணியனை 

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று நேரில் அழைத்து வாழ்த்துக் களையும், பாராட்டுக் களையும் தெரிவித்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings