50 வயதைக் கடந்தவர்களின் பட்டியல்... கலக்கத்தில் அரசு ஊழியர்கள் !

0
ஐம்பது வயதைக் கடந்த அல்லது 30 ஆண்டுகள் பணிமுடித்த ஊழியர்களின் பட்டியலை அனுப்பும்படி அனைத்து துறைகளு க்கும் வேலை வாய்ப்பு 
50 வயதைக் கடந்தவர்களின் பட்டியல்... கலக்கத்தில் அரசு ஊழியர்கள் !
மற்றும் பயிற்சித்துறை குறிப்பாணை அனுப்பி யிருப்பது அரசு ஊழியர் களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது.

தனியார் நிறுவனங்களில் மூத்த ஊழியர் களுக்கு வேலை நிச்சயமற்ற சூழல் ஏற்பட்டுள்ள நிலையில்,

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநரகம் பல்வேறு அரசு அலுவலகங் களுக்கு சமீபத்தில் குறிப்பாணை அனுப்பி யுள்ளது.

அதில் 30 ஆண்டுகள் பணி முடித்த அலுவலர்கள் மற்றும் 50 வயதைக் கடந்த அலுவலர்களின் பட்டியலைத் தயார் செய்யும்படி குறிப்பிடப் பட்டிருந்தது. 

இது மூத்த அரசு ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 

குறிப்பாணையில் துணை ஆட்சியர் மற்றும் உதவி செயலர் உள்ளிட்ட "அ" பிரிவு பணியிடங்கள், தாசில்தார், சார்-பதிவாளர் உள்ளிட்ட "ஆ" பிரிவு பணியிடங்கள், உதவியாளர், 
இளநி்லை உதவியாளர் உள்ளிட்ட "இ" பிரிவு பணியிடங்கள் மற்றும் அலுவலக உதவியாளர், 

காவலாளிகள் அடங்கிய "ஈ" பிரிவு பணியிடங்களில் பணி புரிவோரின் பட்டியலை அனுப்பும்படி குறிப்பிடப் பட்டிருந்தது.

சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 30 ஆண்டு பணி முடித்த ஆசிரியர்கள் பணி ஓய்வில் சென்றால் சலுகைகள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். 

இந்தச் சூழலில் இந்த குறிப்பாணை குறித்த தகவல் பல லட்சம் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது. 

எனினும் இது வழக்கமான சுற்றறிக்கை தான் எனக் கூறியுள்ள அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மத்திய அரசு இது போன்ற திட்டத்தை அறிவித்துள்ள நிலையில்
தமிழக அரசும் அதை பின்பற்றக் கூடுமோ என அச்சம் எழுந்துள்ள தாக தெரிவித்துள்ளனர்.

இது ஆண்டு தோறும் நடக்கும் வழக்கமான கணக்கெடுப்பு தான் என அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். 

அரசு ஊழியர்களோ கொள்கை அளவில் முடிவெடுக்காத வரை பிரச்னை இல்லை என்றும் மத்திய அரசைப் பின்பற்றி மாநில அரசும் 

மூத்த ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப நினைத்தால் போராட்டத்தை கையிலெடுக்க வேண்டும் என எச்சரித்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings