சென்னை இடையே நீராவி என்ஜின் ரெயில் இயக்கம் !

1 minute read
0
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று பழமையை நினைவு கூரும் வகையில், ரெயில்வே நிர்வாகம் சார்பில் பாரம்பரிய ரெயில்கள் இயக்கப்படும். 
சென்னை இடையே நீராவி என்ஜின் ரெயில் இயக்கம்


தெற்கு ரெயில்வேயின் முதன்மை கோட்டமான சென்னை யில் வருடந்தோறும் இத்தகைய சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 100 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜினுடன் கூடிய ரெயில் இயக்கப் பட்டது. 

இதில் ஒரே ஒரு ரெயில் பெட்டி மட்டுமே இணைக்கப்பட்டு இருந்தது. ரெயில் பயணிகள் தங்களது செல்போனில் ரெயிலை படமெடுத்து திருப்தி அடைந்தனர். 

இந்த ரெயில் கோடம்பாக்கம் வரை சென்றது. இந்த ரெயிலை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

நீராவி என்ஜின் ரயிலில் பயணம் செய்ய பெரியவர் களுக்கு ரூ.500, குழந்தைக ளுக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கப் படுகிறது. வெளிநாட்டு பயணிகளுக்கு 1000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டு உள்ளதுஎன அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 21, March 2025
Privacy and cookie settings