பஸ்சில் ஆண் பயணிகளை உரசி.. பிறகு தான் வேடிக்கை.. பானு வேடிக்கை !

1 minute read
0
பஸ்ஸில் ஏறும் பானு.. ஆண்களுக்கு பக்கத்திலேயே நெருக்கமாக, உரசி கொண்டு தான் நிற்பார்.. ஆண்களிடம் பானு தான் முதலில் பேச்சு தருவார்.. 
பானு வேடிக்கை


கவனத்தை திசை திருப்பிய பிறகு தான் பணம், செல்போனை அவர்களிடம் ஆட்டைய போடுவது தான் பானுவின் ஸ்பெஷல்!

சென்னை திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில் 2 நாளைக்கு முன்பு கார்த்திகை தீப விழா கொண்டாடப் பட்டது. 

அந்த சமயத்தில், கோயில் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருந்தது. உமா மகேஸ்வரி என்பவரும் சாமி கும்பிட வந்துள்ளார். அவரை யாரோ திடீரென இடித்து தள்ளிவிட்டு நகர்ந்துள்ளனர்.

பிறகு தான் ஹேண்ட் பேக்கில் இருந்த செல்போனை காணவில்லை என்பது அவருக்கு தெரிந்து, உடனடியாக அங்கிருந்த போலீசாரிடம் சொல்லி உள்ளார். 

அதனடிப் படையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடவும், அப்போது தான் சிக்கினார் பானு!

செல்போன்கள்

40 வயது பெண் பானு.. கல்பாக்கத்தை சேர்ந்தவர்.. சந்தேகத்தின் பேரில் பெண் போலீசார் இழுத்து பிடித்து நிறுத்தவும், தபதபவென செல்போன்கள் இடுப்பி லிருந்து கொட்டின.. 

முதலில் பானுவின் வயிறு பெரிசாக இருக்கவும் கர்ப்பிணி என்று நினைத்தனர்.. ஆனால், இடுப்பு பகுதியில் ஒரு பையை வைத்து, அதற்குள் திருடிய செல்போன் களை நிரப்பி கொண்டு கோயிலுக் குள்ளேயே வலம் வந்துள்ளார்.


ஹேண்ட் பேக்

தீப நாட்களில் இந்த கோயிலில் நல்ல கூட்டம் இருக்கும், பக்தியில் மூழ்கி திளைக்கும் போது ஈஸியா திருடிவிடலாம் என்று கணக்கு போட்டுதான் திருட வந்தாராம் பானு.. 

அப்படி கண்மூடி சாமி கும்பிட்டவர் தான் உமா மகேஸ்வரி என்ற பெண்.. ஹேண்ட் பேக் ஜிப்பை திறந்து, செல்போன் எடுக்கும் வரை உமா மகேஸ்வரி தீவிரமாக சாமி கும்பிட்டபடியே இருந்தாராம்.. 

அதனால் தான் ஒரு இடி இடித்து விட்டு அங்கிருந்து நகர்ந்தேன் என்று அதிர வைக்கிறார் பானு.

அட்டகாசம்
பஸ்சில் ஆண் பயணிகளை உரசி


இந்த திருட்டிலேயே பல காலம் ஊறி திளைத்தவர் பானு.. நிறைய கேஸ்கள் இவர் மீது உள்ளாம்..

ஜெயிலுக்கு போவது, ஜாமீனில் வருவது பானுவுக்கு சர்வ சாதாரணம் என்கிறார்கள். 

கோயில் என்று இல்லை.. பஸ்களிலும் பானுவின் அட்டகாசம் அதிகம். ஆண்கள், பெண்கள் என்ற பேதமே இல்லாமல் திருட்டை அரங்கேற்றுவார்.

செல்போன்கள்

அதிலும் பஸ்ஸில் ஏறி ஆண்களுக்கு பக்கத்திலேயே உரசி நின்று கொள்வாராம்.. பானு தான் முதலில் ஆண்களிடம் பேச்சு தந்து, கவனத்தை திசை திருப்பி அதற்கு பிறகு பணம், செல்போனை ஆட்டைய போடுவாராம்.. 

எந்த பொருள் திருடினாலும் அதை கையில் வைத்து கொள்வதில்லை.. உடனே வந்த விலைக்கு விற்று விட்டு போய் கொண்டே இருப்பாராம். இப்போதைக்கு பானுவிடம் விசாரணை நடந்து வருகிறது!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 22, March 2025
Privacy and cookie settings