புதுச்சேரி பெரிய மார்கெட்டில் வெங்காய மூட்டையை திருடிய சுமை தூக்கும் தொழிலாளியை வியாபாரிகள் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
வட மாநிலங்களில் பெய்த கன மழையின் காரணமாக வெங்காயம் விளைச்சல் பாதியாக குறைந்து விட்டது.
இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக வெங்காய த்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.
இதனால் இல்லத் தரசிகள், உணவகங்கள் நடத்துபவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.
60 ரூபாயி லிருந்து தற்போது 150 ரூபாயை தாண்டி வெங்காயத் தின் விலை நாள்தோறும் ஏறிகொண்டே போகிறது.
விலை உயர்வு ஒருபுறம் இருந்தாலும் வெங்காய தட்டுப்பாடும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனிடையே வெங்காய த்தின் விலையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது.
மேலும் வெங்காயத்தை பதுக்கி வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மத்திய அரசு எச்சரித்துள்ளது.
வெங்காய விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி எம்பிக்கள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தி லும் ஈடுபட்டனர்.
நிலைமை இப்படி யிருக்க, புதுச்சேரியில் வெங்காய மூட்டையை சுமைதூக்கும் தொழிலாளி ஒருவர் திருடி சரமாரியாக அடி உதை வாங்கிய சம்பவம் அரங்கேறி யுள்ளது.
புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது பெரிய மார்க்கெட். இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங் களிலிருந்து
காய்கறிகள் மொத்தமாக இறக்குமதி செய்யப்பட்டு, சில்லரை வியாபாரி களுக்கு இங்கிருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இங்கு புதுச்சேரி சண்முகாபுரம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் மூட்டை தூக்கும் தொழில் செய்து வருகிறார்.
வழக்கம் போல் பெரிய மார்க்கெட் இன்று அதிகாலை பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த போது,
அந்த வாலிபர் மார்க்கெட்டில் அடுக்கி வைத்திருந்த வெங்காய மூட்டைகளில் ஒரு மூட்டையை கடத்தினார்.
அந்த வாலிபர் மார்க்கெட்டில் அடுக்கி வைத்திருந்த வெங்காய மூட்டைகளில் ஒரு மூட்டையை கடத்தினார்.
இதை கண்ட அந்த கடையின் உரிமையாளர் மற்றும் வியாபாரிகள் அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் மூட்டையை மீட்டு, அவரை சரமாரியாக தாக்கி கட்டி வைத்தனர்.
மேலும் இது குறித்து பெரியகடை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். இதனை யடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியகடை போலீசார், வியாபாரிக ளிடமிருந்து வாலிபரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத் தால் பெரிய மார்க்கெட்டில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.
Thanks for Your Comments