வாக்காளர்களுக்கு பணம், பிரியாணி விருந்து - தேர்தல் அதிகாரிகள் !

0
தமிழகத்தில் நீண்ட இழுபறிக்கு பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கு எப்படியாவது முட்டுக் கட்டை போட்டு விடலாம் என்று செயல்பட்ட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எண்ணம் ஈடேறவில்லை.
வாக்காளர்களுக்கு பணம், பிரியாணி விருந்து


ஒருகட்டத்தில் நீதிமன்றமும் கடுப்பாகி உள்ளாட்சி தேர்தல் நடத்தியே ஆக வேண்டும் என்று உத்தர விட்டது.

அதில் சில விதிமுறை களை மட்டும் பின்பற்ற அறிவுறுத்தப் பட்டுள்ளது.

அதாவது புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை,

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம்.

அதே சமயம் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

கடந்த 9ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை 3 லட்சம் பேர் மனு தாக்கல் செய்திருக்க லாம் என்று கூறப்படுகிறது.

இவற்றின் மீது நேற்று பரிசீலனை நடைபெற்றது. வேட்பு மனுக்களை திரும்ப பெற வரும் 19ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மாலையில் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

இதற்கிடை யில் வேட்பாளர் களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் செட்டி நாயக்கன் பட்டியில் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட திமுகவின் சுந்தரவேல் என்பவரின் மனைவி வளர்மதி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து அவர்களது உறவினருக்கு சொந்தமான குடோன் ஒன்றில் வாக்காளர் களுக்கு பணம், பிரியாணி விருந்து அளிக்கப் படுவதாக தகவல் பரவியது. 

இதன் பேரில் விரைந்து சென்ற தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் குடோனில் ஆய்வு செய்தனர்.

அங்கு ஏராளமானோர் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி யுள்ளனர். 

உண்மையில் வாக்காளர் களுக்கு பணம், பிரியாணி கொடுக்கப் பட்டதா? இல்லையா தனிப்பட்ட இல்ல நிகழ்ச்சியா? என்று அதிகாரப் பூர்வமாக தெரிய வில்லை.

இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings