ஏன் உள்ளாட்சி நிர்வாக பதவிக்கு அரசு ஊதியம் இல்லாத நிலையிலும் போட்டி !

0
உள்ளாட்சிப் பிரதிநிதி களுக்கு அரசு ஊதியம் இல்லாத நிலையிலும், இந்த பதவிகளுக்கு போட்டியிட ஏராளமானோர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
அரசு ஊதியம் இல்லாத நிலையிலும் போட்டி !


அப்படி என்ன இருக்கிறது இந்த பதவியில்? எதற்காக இத்தனை போட்டா போட்டி என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்றால் கிராமங்களின் உயிர், உள்ளாட்சி அமைப்புகள் தான்.

சட்டத்திற்கு உட்பட்டு, கிராமத்தில் எந்த பணிகளை வேண்டு மானாலும் ஊராட்சித் தலைவர் மேற்கொள்ளலாம். 

தொகுதி மேம்பாட்டுக்கு ஒதுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர் நிதிக்கே ஆட்சியர் தான் ஒப்புதல் தர வேண்டும்.

ஆனால், கிராமப் புறங்களில் சில பணிகளை ஊராட்சித் தலைவரே முடிவெடுத்து செய்யலாம். 

உள்ளாட்சிக்கு தேர்ந்தெடுக்கப் பட்ட பிரநிதிகள் இருந்தால் தான், மத்திய அரசு நிதியே கிடைக்கும். மத்திய மாநில அரசுகளின் 504-க்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளின் மூலம் தான் நிறைவேற்றப் படுகின்றன.

எனவே தான் இத்தகைய அதிகாரம் கொண்ட பதவிகளை பெற அரசியல் கட்சிகள் மல்லுக்கு நிற்கிறார்கள்.

சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் போல் அல்லாமல், உள்ளாட்சி தேர்தலில் மண்ணின் மைந்தர்களே போட்டியிட முடியும். 


உள்ளாட்சி உறுப்பினர், அந்த பகுதி மக்களுக்கு தெரிந்தவர் களாகவே இருக்க வேண்டுமென்ற நோக்கமே இதற்கு காரணம்.

அதே நேரம் உள்ளாட்சி அமைப்பு பதவிகள் எதற்கும் ஊதியம் கிடையாது.

என்ன தான் அரசியல், சாதிய கட்டமைப்பு, கவுரவம் சூழ்ந்திருந்தாலும் அதனை யெல்லாம் தாண்டி, சேவை நோக்கத்தில் போட்டியிடும் நபர்களுக்கு மக்கள் ஆதரவு தரவே செய்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும், அதிகாரம் கொண்ட உள்ளாட்சி அமைப்பை பற்றி மக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு தேவை.. 

பத்தோடு, பதினோன்றாக இத்தேர்தலை நினைக்கும் மனப்பான்மையை மக்கள் மாற்றினால், வளர்ச்சி உண்டாகும் என்பதில் ஐயமில்லை.

கேரளாவில் உள்ளாட்சி பதவிகளுக்கு ரூ.7000 முதல் 15,000 ரூபாய் வரை ஊதியம் தரப்படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings