யாரெல்லாம் சுங்கக் கட்டணம் செலுத்த தேவையில்லை !

0
தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ் சாலைகளில் வாகன ஓட்டிகள் சாலைகளை பயன்படுத்து வதற்காக சுங்க கட்டணம் வசூலிக்கப் படுகிறது.
சுங்கக் கட்டணம்


இதற்காக குறிப்பிட்ட தூர இடைவெளி களில் சுங்கச் சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. எனினும், இதில் கட்டணம் செலுத்துவதில் இருந்து பலருக்கு விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில ஆளுநர்கள், தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர், மத்திய அமைச்சர்கள், 

மாநில முதல்வர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மாநில அமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள், முப்படை தளபதிகள், சட்டப் பேரவை சபாநாயகர், 

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.

மேலும், ராணுவ கமாண்டர், தலைமைச் செயலாளர்கள் (அந்தந்த மாநில எல்கைக்குள் மட்டும்), மத்திய துறைச் செயலாளர்கள், மக்களவை, சட்டசபை செயலாளர்கள், 
யாரெல்லாம் சுங்கக் கட்டணம் செலுத்த தேவையில்லை !


இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு தலைவர்கள். சட்டமன்ற மேலவை & சட்டப் பேரவை உறுப்பினர்கள் (அந்தந்த மாநில எல்கைக்குள் மட்டும்), பரம் வீர் சக்ரா, 

அசோக் சக்ரா, மஹா வீர் சக்ரா, கீர்தி சக்ரா, வீர் சக்ரா விருது வென்றவர்கள் ஆகியோர் அடையாள அட்டையை காட்டிச் செல்லலாம்.

பாரா மிலிட்டரி படைகள், மாஜிஸ்திரேட், தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய பணி வாகனம், சடலங்களை எடுத்துச் செல்லும் வாகனம் ஆகிய வற்றுக்கு விலக்கு உள்ளது.

மேலும், மாற்றுத் திறனாளிகள் தங்களது வசதிக்கேற்ப வடிவமைக் கப்பட்ட வாகனங்களு க்கும் கட்டண விலக்கு உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings