சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக கடந்த 2017-ம் ஆண்டு பொறுப்பு ஏற்றுக் கொண்ட முகமது பின் சல்மான், பழமைவாத சமூகத்தை தாராள வாதத்தின் பக்கம் கொண்டு செல்ல பல நடவடிக்கை களை எடுத்து வருகிறார்.
அந்த வகையில் நாட்டில் நிலவும் பாலின பாகுபாட்டைகளையும் விதமாக பல்வேறு சீர்திருத்த நடவடிக்கை களை கொண்டு வந்துள்ளனர்.
இதன் மூலம் அந்த நாட்டில் பல ஆண்டுகளாக பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு சமஉரிமை வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு பெண்கள் கார் ஓட்டுவதற்கு இருந்த தடையை அகற்றிய சவுதி அரேபிய அரசு, ஆண் துணை யில்லாமல் பெண்கள் தனியாக பயணிப்பதற்கு இருந்த தடையை இந்த ஆண்டு தொடக்கத்தில் ரத்து செய்தது.
இந்த நிலையில் சவுதி அரேபியா வில் உள்ள ஓட்டல்கள் இனி ஆண்கள்-பெண்களுக்கு என்று தனித்தனியாக நுழைவாயில் வைத்திருக்க வேண்டிய அவசிய மில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதுவரை, அந்த நாட்டில் உள்ள ஓட்டல்கள் குடும்பங்கள் மற்றும் பெண்களுக்கு என்று ஒரு நுழைவாயி லும் தனியாக வரும் ஆண்களுக்கு மட்டும் தனியாக ஒரு நுழைவாயிலும் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று இருந்தது.
அதே போல் ஓட்டல்களின் உள்ளேயும், ஆண்கள் மட்டுமே இருக்கும் பகுதியும், பெண்கள் மற்றும் குடும்பமாக வந்த வாடிக்கை யாளர்கள் இருக்கும் பகுதியும் திரை போட்டு பிரிக்கப்பட்டு இருக்கும்.
ஆனால் இனி ஓட்டல்கள் பாலின அடிப்படையில் நுழைவாயில் வைத்திருப்பது கட்டாயம் அல்ல என்றும்,
அப்படி தனித்தனி நுழை வாயில் வேண்டுமா என்பதை அந்தந்த ஓட்டல்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அந்த நாட்டின் நகராட்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Thanks for Your Comments