அதிமுக வுக்கு வாக்களிக்காவிட்டால் நலத்திட்டம் இல்லை - சாத்தூர் எம்.எல்.ஏ.!

0
அதிமுகவு க்கு வாக்களித்தால் காலுக்கு செருப்பாக இருந்து உழைப்பேன் என்றும், அதே வேளையில் வாக்களிக்கா விட்டால் எந்த நலத்திட்டமும் கிடையாது என்றும் சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன் கூறி யிருக்கிறார்.
அதிமுக வுக்கு வாக்களிக்காவிட்டால் நலத்திட்டம் இல்லை


தனது தொகுதிகுட்பட்ட பகுதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.

ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பதை மறந்து, எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற போது எடுத்துக் கொண்ட உறுதி மொழியை காற்றில் பறக்க விட்டு அவர் இவ்வாறு பேசியுள்ள தாக திமுகவினர் புகார் எழுப்பி யுள்ளனர்.

புதிய எம்.எல்.ஏ.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன். 

எப்போதும் மஞ்சள் சட்டை சகிதமாக வலம் வரும் அவர் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மிகத் தீவிர ஆதரவாளர். அமைச்சரின் கண் அசைவிற்கேற்ப காரியங்கள் ஆற்றக் கூடியவர்.

எம்.எல்.ஏ.சீட்

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 18 தொகுதி இடைத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார் இந்த ராஜவர்மன். 

அவருக்கு சீட் வாங்கிக் கொடுத்ததோடு அவருக்காக செலவழித்து வெற்றி பெறவும் வைத்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. 

இப்படி எம்.எல்.ஏ. வாக ஆகி 6 மாதங்கள் மட்டுமே முடிந்துள்ள நிலையில், அதிமுக வுக்கு ஓட்டுப் போட்டால் மட்டுமே நலத்திட்டம் என மிரட்டல் தொணியில் பேசி யிருக்கிறார் ராஜவர்மன்.


மறந்து விட்டார்

ராஜவர்மன் தாம் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பதை அடியோடு மறந்து விட்டு, மூன்றாம் தர பேச்சாளர் களை போல் பேசியுள்ள தாகவும்,

பதவிக்குரிய மாண்பை இழந்து அவர் நடந்து கொண்டதாக வும் திமுக தரப்பில் புகார் கூறப்படுகிறது. 

மேலும், எங்களுக்கு ஓட்டுப் போட்டால் தான் உங்களுக்கு அரசு திட்டம் என்பது மக்களை மிரட்டும் செயல் என விமர்சிக்கப் படுகிறது.

விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்ட அரசியல்வாதி களையும், சர்ச்சையையும் பிரிக்க முடியாது போல் தெரிகிறது. தாமரைக்கனி காலம் தொடங்கி ராஜவர்மன் வரை அதிரடி கருத்துக் களை கூறுவது தொடர்கதையாக உள்ளது. 

இதனிடையே அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அவர் கூறும் கருத்துக்களும் அவ்வப்போது சர்ச்சையாகும் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings