தேசிய, மாநிலம், கிராமம் என அனைத்து மட்டங்களிலும் உள்ள குடியிருப்பு வாசிகளை கணக்கெடுப்பது தான் NPR எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவு ஆகும்.
குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாதவர்கள் குறித்த சரி பார்க்கப்படாத விவரங்களைக் கொண்டது NPR எனப்படும் தேசிய மக்கள் தொகைப் பதிவு. NPR-ன் தகவல்களைச் சரிபார்த்து உருவாக்கப் படுவது தான் NRC.
2014-ம் ஆண்டில் மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, NPR என்பது
இந்தியாவில் வசிப்பவர்களின் குடிமக்கள் தகுதியை ஆராய்ந்து உருவாக்கப்படும் இந்திய குடிமக்களுக் கான தேசிய பதிவேட்டுக் கான (NRIC) முதல் படியாகும்.
தேசிய மக்கள் தொகை பதிவேடு என்றால் என்ன?
இந்தியாவில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் குறித்த பதிவேடு தான் NPR என்று இந்தியாவின் மக்கள் தொகை ஆணையாளர் விளக்கம் அளித்துள்ளார்.
குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் 2003 ஆகிய விதிகளின் அடிப்படையில் தேசிய, மாநில, மாவட்ட, கிராம அளவில் தேசிய மக்கள் தொகை பதிவேடு உருவாக்கப் படுகிறது.
யாரேனும் ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஆறு மாதமோ அல்லது அதற்கு அதிகமான காலம் வசித்தாலோ அல்லது ஒரு இடத்தில் ஆறு மாதம் காலம் வசிக்க இருந்தால் அவர்கள் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இடம் அளிக்கப்படும்.
இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடியிருப்பு வாசிகளை பதிவு செய்ய வேண்டியது சட்டத்தின்படி கட்டாயமாகும்.
ஒரு இடத்தில் ஆறு மாதம் காலம் தங்கி யிருப்பதோ அல்லது ஆறு மாத காலம் தங்க விருப்பதோ அவரை ஒரு சாதரண குடியிருப்பு வாசியாக கருதுவதற்கு போதுமான ஒன்று ஆகும்.
குடியுரிமை விதிகள் 2003-ன் படி, ‘மக்கள் தொகை பதிவேடு, ஒருவரின் வாழும் கிராமம், நகரம், வார்டு உள்ளிட்ட விவரங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
2019-ம் ஆண்டில் அரசு வெளியிட்ட அறிவிப்பாணையில், குடியுரிமை விதிகள் 2003-ன் விதி 3-ன் படி, மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அசாம் தவிர மற்ற மாநிலங்களில் வீடு வீடாகச் சென்று குடியிருப்பு வாசிகள் குறித்து 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியி லிருந்து செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கணக்கெடுக்கப் பதற்கு முடிவு செய்யப் பட்டுள்ளது.
இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு குடியிருப்பு வாசிகளுக்கும் விரிவான அடையாள தகவல் தளத்தை உருவாக்க வேண்டும் என்பது தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் நோக்கம்.
அது, ஒரு மக்கள் தொகை கணக்கையும் அங்கம் சார்ந்த தகவல் களையும் உள்ளடங்கிய தாக இருக்கும்.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் ஒரு குடியிருப்பு வாசியின் கீழ்கண்ட தகவல்கள் பதிவு செய்யப் பட்டிருக்கும்.
1.பெயர்
2.குடும்பத் தலைவருடனான உறவுமுறை
3.அப்பாவின் பெயர்
4.அம்மாவின் பெயர்
5.மனைவி/கணவர் பெயர்
6.பாலினம்
7.பிறந்த நாள்
8.திருமண விவரம்
9.பிறந்த இடம்
10.குடியுரிமை
11.தற்போதைய முகவரி
12.தற்போதைய முகவரியில் தங்கி யிருக்கும் காலம்
13.நிரந்தர முகவரி
14.தொழில்/வேலை
15.படிப்புத் தகுதி
2011-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை பதிவேட்டுக் காக, 2010-ம் ஆண்டு வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கப் பட்டது. பின்னர், 2015-ம் அந்த தகவல்கள் புதுப்பிக்கப் பட்டன.
தற்போது, 2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை பதிவேட்டுக் காக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடைபெறும்.
இந்தியக் குடிமகன் களுக்கான தேசியப் பதிவேடு (NRIC) என்றால் என்ன?
இந்தியக் குடிமகன் களுக்கான தேசியப் பதிவேடு, இந்தியாவில் வாழும் இந்தியக் குடிமகன்கள் மற்றும்
இந்தியாவுக்கு வெளியே வாழும் இந்தியர்கள் குறித்து விவரங் களையும் கொண்டிருக்க வேண்டும் என்று குடியுரிமை விதிகள் 2003 வரை யறுக்கிறது.
நீண்ட நாள்களுக்கு முன்னர் தேசிய குடிமக்கள் பதிவேடு 1951-யை அசாமில் புதுப்பிக்க வேண்டும் என்று 2015-ல் உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது.
வாஜ்பாய் தலைமை யிலான மத்திய அரசு, குடியுரிமை விதிகள் 2003-ன் படி, நாடு முழுவதுக்கு மான தேசிய குடிமக்கள் பதிவேட்டை உருவாக்கு வதற்கான பணியைத் தொடங்கியது.
இந்தியக் குடிமகன் களுக்கான தேசிய கீழ்கண்ட தகவல் களைக் கொண்டிருக்கும்:
1.பெயர்
2.அப்பாவின் பெயர்
3.அம்மாவின் பெயர்
4.பாலினம்
5.பிறந்தநாள்
6.பிறந்த இடம்
7.வீட்டு முகவரி (தற்போதையது மற்றும் நிரந்த முகவரி)
8.திருமண விவரம் (திருமணம் நடைபெற்றிருந் தால் துணையின் பெயர்)
9.அங்க அடையாளம்
10.குடிமகனாக பதிவு செய்யப்பட்ட நாள்
11.பதிவு செய்யப்பட்ட எண்
12. தேசிய அடையாள எண்
மக்கள் தொகை கணக்கெடுப்பு என்றால் என்ன?
பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தின் படி, குறிப்பிட்ட காலத்தில் இந்த நாட்டில் வசிக்கும் அனைத்து மக்களின் தகவல் களையும் சேகரித்து அதனை தொகுத்து,
பின்னர் ஆராய்ந்து, பொருளாதார, சமூக தகவல்களை உள்ளடக்கி உருவாக்கப் படும் நடைமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும்.
குறிப்பிட்ட காலத்தில், நாட்டில் வசிக்கும் மக்களின் எண்ணிகை மற்றும் வீடுகள் குறித்த விவரங்களை அளிப்பது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கியப் பணி நாட்டின் மக்கள் தொகையை சமூக பொருளாதார மற்றும் பிற குணாதிசய த்தின் கீழ் வகைப் படுத்தி தகவல்களை அளிப்பது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப் படும் தகவல்கள் அரசு நிர்வாகத்து க்கும், அரசு திட்டங்கள் வகுப்பதற்கும், கொள்கையை வரையறுப் பதற்கும் உதவும்.
மேலும், தொண்டு நிறுவனங்கள், ஆய்வாளர்கள், தனியார் நிறுவனங்க ளுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பயன்படும்.
மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதி, உள்ளாட்சி தொகுதிகளை மறுவரையறை செய்வதற்கும் உதவுகிறது.
நாடு முழுவதும் அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளும் போது
அதற்கான நோக்கத்தை மத்திய அரசு அதிகாரப் பூர்வ அறிவிப்பானை மூலம் விளக்க வேண்டும் என்று 1948-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டம் ஆணை யிடுகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு கீழ்கண்ட தகவல்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப் படுகின்றன.
1.பெயர்
2.குடும்பத் தலைவருடனான உறவு
3.பாலினம்
4.பிறந்தநாள் மற்றும் வயது
5.திருமண விவரம்
6.திருமணமாகும்போது வயது
7.மதம்
8.எஸ்.சி/எஸ்.டி
9.மாற்றுத்திறனாளி
10.தாய்மொழி
11.தெரிந்த மொழிகள்
12.படிப்பு விவரம்
13.படித்த கல்வி நிறுவனங்கள் குறித்த விவரம்
14.அதிகபட்ச கல்வி விவரம்
15.கடந்த வருடம் எந்த காலத்தில் வேலையில் இருந்தீர்கள்
16.பொருளாதார நடவடிக்கைகளின் வகை
17.தொழில்
18.நிறுவனம், வர்த்தகம், சேவையின் வகை
19.வேலையாளின் நிலை
20.பொருளாதாரம் சாராத செயல்பாடுகள்
21.வேலைக்கான வாய்ப்புகள்
22.வேலைக்காக செல்லும் தூரம்
23.பிறந்த இடம்
24.கடைசியாக வசித்த இடம்
25.இடம் மாறியதற்கான காரணம்
26.தற்போது வசிக்கும் பகுதியில் வசிக்கும் கால அளவு
27. உயிருடன் இருக்கும் குழந்தைகள்
28.மொத்தமாக பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை
29.குழந்தைகளின் எண்ணிக்கை
தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் இந்திய குடிமக்களுக் கான தேசியப் பதிவேடு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புக் கான ஆகிய வற்றுக்கு இடையிலான முக்கிய வித்தியாசங்கள்:
குடிமக்களின் தகவல்களை சேகரிக்கும் முறை மூன்று விவகாரங் களுக்கும் ஒரே மாதிரியாக இருந்தாலும், ஆனால், தகவல்களை உள்ளடக்கி யிருக்கும் தன்மையில் வித்தியாசங்கள் இருக்கும்.
மேலும், அதனுடைய பயன்பாட்டிலும் வித்தியாசம் உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு நாட்டின் மக்கள் எண்ணிக்கை குறித்த தகவல் களைக் கொண்டிருக்கும் போது,
தேசிய மக்கள் தொகை பதிவேடு ஒருவரின் அதிகபட்ச தகவல்களை எதிர் பார்க்கிறது. மேலும், அவருடைய குடியுரிமை குறித்து அவர்கள் அளித்த தகவல்களும் அங்க அடையாளங் களும் இடம்பெறும்.
தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கு இடையிலான தொடர்பு குறித்து பல்வேறு அரசு ஆவணங்கள் குறிப்பிட்டுள்ளன.
2014-ம் ஆண்டு மத்திய தகவல் தொடர்பு ஆணையம் வெளியிட்ட குறிப்பில், ‘தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது இந்தியாவில் வசிக்கும் அனைத்து மக்களையும் உள்ளடக்கியது.
அதில், இந்தியக் குடிமக்களும் அடங்குவார்கள். இந்திய குடிமக்கள் அல்லாதவர் களும் அடங்குவார்கள்.
தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது இந்தியக் குடிமகன் களுக்கான தேசிய பதிவேட்டை உருவாக்குவ தற்கான முதல் படியாகும்’ என்று குறிப்பிட்டுள்ளது.
Thanks for Your Comments