முத்தலாக் பிரச்சினையின் போது இஸ்லாமிய சமூகத்தை அ.தி.மு.க ஆதரித்தது. அதே போல், என்.ஆர்.சி விவகாரத்தில் தமிழக முதல்வர் எங்கள் சமூகத்தை ஆதரிப்பார்.
என்.ஆர்.சியை செயல்படுத்த மாட்டார் என 100% நம்பிக்கை உள்ளதாக அமைச்சர் நிலோபர் கஃபில் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
தமிழகத்திலும் இப்பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
தமிழகத்திலும் இப்பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
மேலும், இஸ்லாமிய மக்கள் மத்தியில் பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்கு அமைச்சர் நிலோபர் கஃபில் சென்றிருந்த போது,
இச்சட்டத் திருத்தம் குறித்து இஸ்லாமிய மக்களுக்கு இருந்த பயத்தை மக்கள் தெரிவிப்பது, அதற்கு அமைச்சர் இஸ்லாமிய மக்கள் பயப்பட வேண்டாம் என ஆறுதல் கூறிவது போன்ற வீடியோ சமூக வலை தளத்தில் பரவியது.
இது குறித்து அமைச்சர் நிலோபர் கஃபிலைத் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது பேசிய அமைச்சர், ‘தேர்தல் நேரத்தில் இந்த விஷயத்தைப் பற்றி மக்களிடம் பேச நான் விரும்ப வில்லை.
தர்மபுரி மாவட்டத்திற்கு அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த அனைத்து முஸ்லிம் பெண்களையும், சில மசூதிகளுக்கு சென்று மக்களை சந்தித்தேன்.
அங்கு சென்ற போது மக்கள் இச்சட்டம் குறித்து வருத்தம் தெரிவித்தனர். மக்கள் அடையாள அட்டை இல்லை என்று என்னிடம் சொல்லத் தொடங்கினர்.
அவர்களில் சிலர் சரியான ஆவணங்கள் இல்லை என்று கூறி இந்தச் சட்டத்திற்கு பயந்தார்கள். நான் அவர்களை ஆறுதல் படுத்த வேண்டி யிருந்தது.
அவர்களுடைய மனத்தில் இருக்கும் பயத்தை நான் அகற்ற வேண்டி யிருந்தது. இதனால் அவர்கள் அமைதியான இரவைப் பெறுவார்கள். அவர்களின் முகத்தில் இருந்த பயத்தைப் பார்த்து நான் கவலைப் பட்டேன்.
அதன் பிறகு, நான் முதல்வரை சந்திக்க முடிவு செய்தேன். முதலில், இதன் தீவிரம் எனக்கு தெரிவில்லை. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, மக்கள் போராடுவதை பார்த்ததும் எனக்கு மிகவும் கவலையாக இருந்தது.
அதனால் தான் கடந்த ஞாயிற்றுக் கிழமை முதலமைச்சரை கட்சி அலுவலகத்தில் சந்தித்து இது குறித்து பேசினேன். எனது சமூக மக்கள் பற்றிய எனது கவலையை தெரிவித்தேன்.
நாங்கள் என்.ஆர்.சியை செயல்படுத்த மாட்டோம் என்று நம்புகிறோம். ஆனால், அது கட்சியின் முடிவைப் பொறுத்தது. இந்த விவகாரத்தில் எந்த பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்வதாக முதலமைச்சர் எனக்கு ஆறுதல் கூறினார்.
முத்தலாக் பிரச்சனை யின் போது, இஸ்லாமிய சமூகத்தை அ.தி.மு.க எவ்வாறு ஆதரித்ததோ,
அதே போல் என்.ஆர்.சி விவகாரத்திலும், இந்த அரசாங்கம் எங்கள் சமூகத்தை ஆதரிக்கும் என்று நான் நம்புகிறேன்.
அதே போல் என்.ஆர்.சி விவகாரத்திலும், இந்த அரசாங்கம் எங்கள் சமூகத்தை ஆதரிக்கும் என்று நான் நம்புகிறேன்.
முதல்வர் என்.ஆர்.சியை செயல்படுத்த மாட்டார் என்று எனக்கு 100% நம்பிக்கை உள்ளது என்றார்.
இருப்பினும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக அ.தி.மு.க எம்.பிக்கள் வாக்களித்தது குறித்து கேட்டதற்கு, கருத்து தெரிவிக்க விரும்ப வில்லை என தெரிவித்தார்.
Thanks for Your Comments