வங்கியில் கொள்ளை யடித்த பணத்தை மக்கள் கூடியிருந்த பகுதியில் வீசிவிட்டு, கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறிய முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் அகாடமி வங்கி இயங்கி வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் வங்கியில் புகுந்த முதியவர் ஒருவர் தன்னிடம் பயங்கர ஆயுதம் இருப்பதாக கூறி ஊழியர்களை மிரட்டியுள்ளார்.
பின்னர், கருவூலத்தில் இருந்த பல லட்சம் டாலர்களை கொள்ளை யடித்த அவர் அங்கிருந்து வெளியேறினார்.
பணத்துடன் வெளியே வந்த அவர் பொது மக்கள் அதிகமாக கூடும் இடத்திற்குச் சென்று டாலர்களை அள்ளி வீசியுள்ளார்.
முதியவர் திடீரென்று கத்தை கத்தையாக டாலர்களை அள்ளி வீசியதும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பலரும் பணத்தை போட்டிபோட்டு எடுத்துள்ளனர்.
பணத்தை வீசும் போது ”எல்லோரும் சந்தோஷமாக கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள்” என்று அந்த முதியவர் கூறியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொள்ளை தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வங்கிக்கு சென்று விசாரணை நடத்தி பின்னர் பணம் வீசப்பட்ட இடத்திற்கு வந்தனர்.
இதைத் தொடர்ந்து அந்த முதியவரை தேடிய போது அவர் அங்குள்ள கடையில் காபி அருந்திக் கொண்டிருந் துள்ளார்.
உடனே அவரை போலீசார் கைது செய்தனர். முதியவரின் பெயர் டேவிட் வேன் ஆலிவர் என்றும்
அனைவரும் சந்தோஷமாக கிறிஸ்துமஸ் கொண்டாட வங்கியில் கொள்ளை யடித்ததை ஒப்புக் கொண்டதாக வும் போலீசார் கூறியுள்ளனர்.
அனைவரும் சந்தோஷமாக கிறிஸ்துமஸ் கொண்டாட வங்கியில் கொள்ளை யடித்ததை ஒப்புக் கொண்டதாக வும் போலீசார் கூறியுள்ளனர்.
இதனிடையே, முதியவரின் பணத்தை எடுத்த பலர் போலீஸ் விசாரணைக்கு பயந்து வங்கியில் பணத்தை திரும்பத் தந்துள்ளனர்.
எனினும், பல லட்சம் மதிப்பிலான டாலர்கள் இன்னும் வந்து சேர வில்லை என்கிறது வங்கி.
Thanks for Your Comments