கல்லூரி மாணவியிடம் சிறார் ஆபாசப் படத்தைக் காட்டி பாலியல் தொந்தரவு செய்த முதியவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (72). இவர் ரெப்கோ வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் தனது வீட்டின் மேல்தளத்தில் குடியிருந்த கல்லூரி மாணவிக ளிடம் சிறார் ஆபாசப் படத்தைக் காட்டி பாலியல் ரீதியான தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கல்லூரி மாணவி ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் மோகனை கைது செய்த மகளிர் காவல் துறையினர் அவர் மீது பாலியல் தொந்தரவு, பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ளுதல், போக்சோ,
உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Thanks for Your Comments