கடற்படை தளத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி !

0 minute read
0
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் பென்சகோலா பகுதியில் அந்நாட்டு கடற்படை தளம் அமைந்துள்ளது. இந்த தளத்தில் ஆயிரக் கணக்கான கடற்படை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கடற்படை தளத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி


இந்நிலையில், அந்த கடற்படை தளத்தில் இன்று நுழைந்த மர்ம நபர் திடீரென அங்கு பணியில் இருந்து வீரர்களை நோக்கி கண்மூடித்தன மாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 10-க்கும் அதிகமானோர் படுகாய மடைந்தனர்.

இதையடுத்து, அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை சுட்டுக்  கொன்றனர். 

மேலும், வேறு சிலர் கடற்படை தளத்திற்குள் மறைந்திருக் கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் அப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த பலர் நிலைமை மிகவும் கவலைக் கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 17, April 2025
Privacy and cookie settings