நாடு நாடாக வந்து இறங்கும் வெங்காயம் - தெறித்து ஓடும் மக்கள் !

0
நாடு முழுவதும் பெய்து வந்த தொடர் மழையால் வெங்காயத்தின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப் பட்டது. இதனால் கடைகளில் வரத்து குறைந்து, விலை கிடுகிடுவென உயர்ந்தது.
நாடு நாடாக வந்து இறங்கும் வெங்காயம்


சாமானிய மக்கள் வாங்க இயலாத வகையில் விலை உச்சத்தை தொட்டது.

இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய தீர்வு காண வேண்டும் என்று பொது மக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்தனர்.

இதை யடுத்து வெளிநாட்டில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து தமிழகத்தில் விற்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று மாநில அரசு தெரிவித்தது. 

அதன்படி எகிப்து நாட்டில் இருந்து முதல் கட்டமாக வெங்காயம் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

திருச்சி வெங்காய மொத்த விற்பனை கடைகளுக்கு பெரிய வெங்காயம் 60 டன், சின்ன வெங்காயம் 30 டன் என மொத்தம் 90 டன் வெங்காயம் விற்பனைக்கு வந்தன.

மொத்த விற்பனைக் கடையில் பெரிய வெங்காயம் ரூ.60ல் இருந்து ரூ.110 வரையிலும், சின்ன வெங்காயம் ரூ.40ல் இருந்து ரூ.90 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

சில்லறை விற்பனையில் இரண்டு வெங்காயமும் கிலோவிற்கு ரூ.20 வரை கூடுதலாக இருக்கும். கடந்த வாரத்தில் எகிப்தில் இருந்து 40 டன் பெரிய வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


ஆனால் எகிப்து வெங்காயம் தமிழக மக்களிடையே போதிய வரவேற்பு பெறவில்லை.

ஏனெனில் அதன் அடர் நிறத்தை பார்த்து மக்கள் வாங்க தயங்கினர்.

இந்த வெங்காயத்தால் எந்தவித பாதிப்பும் இருக்காது என்று தமிழக அரசு விளக்கம் கொடுத்தது.

இருப்பினும் வெங்காயம் போதிய அளவு விற்கப்படாததால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.

இந்த சூழலில் தற்போது துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது காரமில்லை. இனிப்பாக இருக்கிறது என்று கூறி பொதுமக்கள் வாங்க மறுக்கின்றனர்.

இதன் காரணமாக வாங்கிய விலைக்கு கூட விற்க முடியாமல் வியாபாரிகள் சிரமப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings