சேலத்தைச் சேர்ந்த ஓர் இளம் பெண் தன் காதலை பெற்றோர் களிடமிருந்து மறைப்பதற் காகப் பேய் பிடித்தது போல நடிக்க,
உடனே அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் திருநங்கை சாமியாரிடம் கூட்டிப் போய்க் காட்டியதோடு பேய் ஓட்ட ஏற்பாடு செய்திருக்கி றார்கள்.
அந்தத் திருநங்கைக்கு அருள் வாக்கு வந்து பேய் ஓட்டியதோடு பிரம்பால் அடிக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகப் பரவி சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
சேலம் கன்னங் குறிச்சி பாண்டியன் தெருவில் காளியம்மன் கோயில் உள்ளது.
இந்தக் கோயிலை மதுரா என்கின்ற திருநங்கை கட்டி பூசாரியாக இருந்து வருவதோடு சாமி ஆடி அருள் வாக்கும் சொலவதோடு பேய்கள் ஓட்டியும் வருகிறார்.
இந்தக் கோயிலை மதுரா என்கின்ற திருநங்கை கட்டி பூசாரியாக இருந்து வருவதோடு சாமி ஆடி அருள் வாக்கும் சொலவதோடு பேய்கள் ஓட்டியும் வருகிறார்.
இதனால் சேலத்தின் பல பகுதிகளி லிருந்து அருள் வாக்கு கேட்பதற்கும், பேய் ஓட்டு வதற்கும் பக்தர்கள் வருகிறார்கள்.
இந்நிலையில் சேலம் செவ்வாய்ப் பேட்டையைச் சேர்ந்த இளம்பெண் தன் காதலை மறைப்பதற் காகப் பேய் பிடித்தது போல நடித்திருக்கிறார்.
அதை யடுத்து அவருடைய பெற்றோர்கள் திருநங்கை சாமியிடம் கூட்டி வந்து பேய் ஓட்டிய வீடியோதான் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
அந்த வீடியோவில் முதலில் திருநங்கை சாமியார்... அந்தப் பெண்ணின் தலையில் மயில் இறகுகளால் அடிக்கிறார்.
பிறகு அந்த இளம் பெண்ணின் தலை முடியைப் பிடித்துக் கொண்டு சாமி பெயர்களைச் சொல்லி,
'பேய், பிசாசுகள் விலகி ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் செய்யாமல் ஓடிப் போய் விட வேண்டும்.
'பேய், பிசாசுகள் விலகி ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் செய்யாமல் ஓடிப் போய் விட வேண்டும்.
நீ பிடித்த இடத்திற்கே போகிறாயா? இல்லை மயானத்திற்குப் போகிறாயா... எந்த ஊரில் பிடித்தாய்? என்று அதட்டலாக மிரட்ட அந்தப் பெண், `மணியனூரில் பிடித்தேன்.
என் பேரு பானுப்ரியா'' என்று சொல்ல திருநங்கை 'கடித்து ரத்தத்தை உறிந்து கொள்ளலாமா?'' என்க அந்தப் பெண் வலிக்கிறது, வலிக்கிறது என்று கதறுகிறார்.
அதைச் சுற்றி அந்தப் பெண்ணின் அப்பா, அம்மா அமர்ந்து கொண்டு ''சாமி சொல்லுவதைக் கேள்'' என்கிறார்கள். திருநங்கை, ''இவளுக்குப் பேய் பிடிக்க வில்லை.
நடிக்கிறாள்' என்று பிரம்பால் அடித்து, 'நீ பேய் பிடித்திருக்கிறது என்று சொல்லுவது பொய் தானே' என்று
பிரம்பால் அடிக்க இங்கு பொய் பேசினால் என்ன நடக்கும் என்று அங்கு இருப்பவர் களிடம் சொல்லச் சொல்லுகிறார்கள்.
அவர்கள், பொய் சொன்னால் ரத்த வாந்தி எடுப்பாய் என்று கூறுகிறார்கள்.
கடைசியாக அந்த இளம்பெண், ஒருவரை காதலிப்ப தாகவும், அதை மறைக்க பேய் பிடித்ததாகக் கூறி நாடகமாடிய தாகவும் கூறியுள்ளார்.
கடைசியாக அந்த இளம்பெண், ஒருவரை காதலிப்ப தாகவும், அதை மறைக்க பேய் பிடித்ததாகக் கூறி நாடகமாடிய தாகவும் கூறியுள்ளார்.
பின்னர் `பொய் சொல்ல மாட்டேன்' என இளம்பெண் தன்னுடைய தந்தையைத் தாண்டி சத்தியம் செய்து யுள்ளார்.
இந்த வீடியோ வைரலாகப் பரவ, இது தொடர்பாக கலெக்டர் அலுவலக த்திற்கு வந்த திருநங்கை மதுரா, ''நான் கன்னங்குறிச்சி பகுதியில் கோயில் கட்டி சாமி கும்பிட்டு வருகிறேன்.
நான் அருள் வாக்கு, பேய் பிடித்திருந்தால் ஓட்டுவேன். அப்படி செவ்வாய்ப் பேட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்குப் பேய் பிடித்திருப்ப தாக அவுங்க அப்பா, அம்மா கேட்டுக் கொண்டதால் பேய் ஓட்டினேன்.
அதை ஊடகங்கள் தவறாக சித்திரித்துக் காட்டி யிருக்கிறது. இதனால் நான் உளவியலாகப் பாதிக்கப் பட்டிருக்கிறேன்'' என்றார்.
Thanks for Your Comments