சிறுபான்மையின குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் !

0
பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மத பாகுபாட்டால் வெளியேறி இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மை யினருக்கு 
சிறுபான்மையின குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு


இந்திய குடியுரிமை அளிக்க வகை செய்யும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவை யில் நேற்று நிறைவேற்றப் பட்டது.

இந்த மசோதாவுக்கு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும், மக்களவை யில் பாஜகவுக்கு தனிப்பெரும் பான்மை இருந்ததால் மசோதா சிக்கல் இன்றி நிறைவேறியது. 

இதை யடுத்து குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இன்று மாநிலங்க ளவையில் செய்யப் படுகிறது.

இந்நிலையில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாணவர் சங்கம் மற்றும் அனைத்து அசாம் மாணவர் சங்கம் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறு கிறது. 

இதனால் கவுகாத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப் பட்டுள்ளன. வாகனங்கள் இயக்கப்பட வில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படு கின்றன. மாணவர் அமைப்பினர் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர்.

அனைத்து அசாம் மாணவர் சங்கத்தினர் திப்ருகர், ஜோர்பத் பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சாலைகளில் டயர்களை கொளுத்திப் போட்டு போக்குவரத்து தடையை ஏற்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings