அர்ஜுனா விருது பெற்ற பாடிபில்டர் பாஸ்கரனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை - தமிழக அரசு !

0
அர்ஜுனா விருது பெற்ற பாடிபில்டர் பாஸ்கரனுக்கு 25 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.


தமிழக பாடிபில்டர் பாஸ்கரன் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான உடற்கட்டு போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்கள் வென்றுள்ளார்.

2018-ம் ஆண்டு அக்டோபர் 2 முதல் 8 வரை புனே நகரில் நடைபெற்ற ஆசிய பாடி பில்டிங் போட்டியில் பங்கேற்று 60 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.

2018-ம் ஆண்டு டிசம்பர் 11 முதல் 17 வரை தாய்லாந்தில் நடைபெற்ற 10-வது உலக பாடிபில்டிங் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

இதனைத் தொடர்ந்து, இந்திய அரசு சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜுனா விருது இவ்வாண்டு அவருக்கு வழங்கப் பட்டது.

இந்நிலையில், அவரது செயல்பாடுகளை ஊக்குவிக்கும் விதமாக அவருக்கு 25 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை அறிவித்து தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. 

அவரது பயிற்றுநர் எம்.அரசுக்கு 3.75 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கும்படி அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings