ஈரோடு கருங்கல் பாளையம் கமலா நகரைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவரது மனைவி புஷ்பலதா (29). சம்பவத்தன்று புஷ்பலதா நாமக்கல்லில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று இருந்தார்.
அப்போது புஷ்பலதாவுக்கு கருங்கல் பாளையம் பக்கத்து வீட்டில் வசிக்கும் தெரிந்தவர் போன் செய்து உனது கணவர் தூக்குப் போட்டு தொங்கிக் கொண்டிருப்ப தாக தெரிவித்தார்.
என கேட்டு அதிர்ச்சி அடைந்த புஷ்பலதா உடனடியாக தனது வீட்டிற்கு வந்தார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்த கணவரை மீட்டு சிகிச்சைக் காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரி க்கு கொண்டு சென்றார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சரவணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கருங்கல் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. போலீசாரின் முதல் கட்ட விசாரணை யில் கடன் தொல்லை யால் சரவணன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
எனினும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Thanks for Your Comments