நடுக்கடலில் பிணங்களுடன் கப்பல்... மனிதர்கள் சென்றதும் வெடித்து சிதறியது... நடந்தது என்ன?

5 minute read
0
நடுக்கடலில் நல்ல வெயில் நேரத்தில் சென்ற ஒரு கப்பலில் பயணித்தவர்கள் எல்லாம் ஒரே நேரத்தில் பனியில் உரைந்து இறந்து போனார்கள் 
நடுக்கடலில் பிணங்களுடன் கப்பல்
இதைப் படிக்கும் போது ஏதோ கதை என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இப்படியான ஒரு சம்பவம் உண்மையிலேயே நடந்துள்ளது. 

இது மட்டுமல்ல இந்த கப்பல் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. இந்த சம்பவம் பற்றி முழுமையாக படிக்கலாம் வாருங்கள்.

சில்வர் ஸ்டார்

1947ம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் உலகப்போர் முடிந்த தருணம் அமெரிக்கா தங்கள் பலத்தை உலக நாடுகளு க்குக் காட்ட வேண்டும் என்பதற்காக தங்களது ராணுவத்தினரைப் பல நாடுகளுக்கு அனுப்பி வைத்தனர். 
சில்வர் ஸ்டார்
அப்படியாக அனுப்பப்பட்ட கப்பல் சில்வர் ஸ்டார். இந்த கப்பல் அமெரிக்க ராணுவ வீரர்களுடன் மலாக்கா வழியாகக் குறிப்பிட்ட அந்த நாளில் பயணம் செய்து கொண்டிருந்தது

தகவல் தொழிற்நுட்பம்

அந்த காலகட்டங்களில் தொழிற்நுட்பங்கள் பெரிய அளவில் வளரவில்லை. அதனால் கடல் வழியாகக் கப்பல் களுக்கு சிக்னல் அனுப்ப ரேடியோ ப்ரீகொன்ஸி அதாவது 
தகவல் தொழிற்நுட்பம்
அந்த கால டெலிகிராம் முறையைத் தான் பயன்படுத்தி வந்தனர். ஒருவர் டெலிகிராம் மிஷினை தட்டுவது மூலம் அந்த தகவல் சுற்றியுள்ள டெலிகிராமை ரிசிவ் செய்யும் அனைவருக்கும் சென்றடையும்.

ஓராங் மெடான்

இந்நிலையில் அந்த பகுதியில் பயணத்தி லிருந்த பல கப்பல் களுக்கும் மலேசியா துறைமுகத் திற்கும் ஒரே நேரத்தில் ஒரு சிக்னல் வந்தது. 

அந்த சிக்னல் "ஓராங் மெடான் கப்பலில் ஆபத்து, கேப்டன் உட்பட அனைவரும் இறந்து விட்டார்கள்... 
ஓராங் மெடான்
நானும் இறந்து விட்டேன்" என வந்தது. இதைப் பார்த்தும் அனைவரும் அதிர்ச்சி யடைந்தனர். அனைத்து கப்பல்களும் இந்த தகவல் எங்கிருந்து வந்தது. என்பதை ஆய்வு செய்யத் துவங்கினர்.

அனாதை கப்பல்

அப்பொழுது இந்த தகவல் வந்த இடத்திற்கு அருகில் சில்வர் ஸ்டார் கப்பல் தான் இருந்ததால் இந்த கப்பலைத் தகவல் வந்த இடத்தை நோக்கித் திருப்ப சில்வர் ஸ்டார் கப்பலின் கேப்டன் உத்தர விட்டார். 
அனாதை கப்பல்
அதன்படி சில்வர் ஸ்டார் கப்பல் அந்த தகவல் வந்த இடத்தை நோக்கிச் சென்ற போது அங்கு எஸ் எஸ் ஒராங் மெடான் என்ற கப்பல் அந்த அசைவும் ஆரவாரமும் இன்றி இருந்தது.

உரைந்த மனிதர்கள்

இதை யடுத்து சில்வர் ஸ்டார் ஊழியர்கள் சிலர் ஒராங் மெடான் கப்பலுக்குள் சென்று பார்த்த போது அங்கு அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 
உரைந்த மனிதர்கள்
ஒராங் மெடானிற்குள் இருந்த எல்லோரும் உரைந்து போன நிலையில் இறந்து கிடந்தனர். கேப்டன் உட்பட அனைவருமே இறந்து கிடந்தனர். 

இந்த தகவலை அனுப்பி யவரைப் பார்க்கும் போது அவரும் உரைந்த நிலையில் இறந்து கிடந்தார்.

மர்ம மரணம்

இறந்தவர்கள் எல்லாம் ஏதோ ஒன்றைப் பார்த்துப் பயந்தபடி கைகளை வைத்து எதையோ தடுக்கும்படி கண்கள் வருந்த நிலையில் அப்படியே உரைந்து போயிருந்தனர். 
மர்ம மரணம்
இதைப் பார்த்ததும் சில்வர் ஸ்டார் கப்பலி லிருந்தவர் களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

கப்பலை நகர்த்த ஏற்பாடு

இதைப் பார்த்ததும் இந்த கப்பலை நகர்த்தி அருகில் உள்ள துறைமுகத்திற்குக் கொண்டு செல்ல சில்வர் ஸ்டார் கப்பலின் கேப்டன் முடிவு செய்தார். 
கப்பலை நகர்த்த ஏற்பாடு
அதற்காக கப்பல் ஊழியர்கள் எல்லாம் அந்த கப்பலை தங்கள் கப்பலுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்பொழுது அடுத்த மர்மம் நிகழ்ந்தது.

வெடித்தது ஓராங் மெடான்

திடீரென ஓராங் மெடான் கப்பல் தீ பிடித்து எரியத் துவங்கியது. இதனால் பதற்றமான சில்வர் ஸ்டார் கப்பல் ஊழியர்கள் அந்த கப்பலை இணைக்கும் பணியை நிறுத்தி விட்டு 
வெடித்தது ஓராங் மெடான்
அந்த கப்பலின் இணைப்பைத் துண்டிக்கத் துவங்கினர். ஒரு கட்டத்தில் ஓராங் மெடான் கப்பல் வெடித்து நீரில் மூழ்கியது.

அதிர்ச்சி

சில்வர் ஸ்டார் கப்பலிலிருந்த பலருக்கு இது எப்படிச் சாத்தியமானது என்றே புரியவில்லை. உடனடியாக இப்படி ஒரு கப்பல் இருந்தது குறித்தும், 
அதிர்ச்சி
அந்த கப்பலில் உள்ளவர்கள் உரைந்த நிலையில் இறந்து கிடந்தது குறித்தும், அந்த கப்பல் வெடித்தது குறித்து அருகில் உள்ள துறை முகத்திற்கு தகவல் அனுப்பப் பட்டது.

விசாரணை
விசாரணை
இதையடுத்து அந்த ஓராங் மெடான் கப்பல் எந்த நாட்டை சேர்ந்தது என விசாரணை நடந்தது. 

எப்போது பால் குடிக்கலாம் காலையா? இரவா?

விசாரணையில் அந்த கப்பல் எந்த நாட்டிலும் பதிவு செய்யப்பட வில்லை என்பது தெரிய வந்தது. இது அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மர்மங்கள் என்ன?

இந்த கப்பல் எப்படிப் பயணித்தது? எங்குத் தயாரிக்கப் பட்டது? அதில் பயணித்தவர்கள் யார் யார்? அதில் என்ன எடுத்துச் செல்லப்பட்டது? 
மர்மங்கள் என்ன?
அவர்கள் திடீரென உரைந்து போன நிலையில் இறந்து கிடந்தது எதனால்? 

அந்த கப்பல் திடீரென தீப்பிடித்து வெடித்ததன் காரணம் என்ன என்ற கேள்வி களுக்கு இன்றும் பதில் இல்லை. எனினும் இது குறித்து சில தியரிகள் உள்ளன அதைப் பற்றிப் பார்க்கலாம்.

தியரி- 1 கடத்தல் பொருள்

இந்த கப்பல் கடத்தல் காரர்களின் கப்பலாக இருக்கக் கூடும் எனவும் இவர்கள் பொட்டாஷியம் சைனேடு மற்றும் நைட்ரோகிளஸரின் ஆகிய வற்றைக் கடத்தி யிருக்கலாம் என்றும் 
கடத்தல் பொருள்
ஒரு பயணத்தின் போது கடல் நீர் உள்ளே புகுந்ததால் ஏற்பட்ட கெமிக்கல் மாற்றத்தில் ஏதேனும் விஷ வாயு பரவி இவர்கள் உரைந்திருக்கலாம் என்றும் 

பொட்டாஷியம் சைனேடு உடன் தண்ணீர் கலந்ததால் தீ ஏற்பட்டிருக்கும் என்றும் கூறுகின்றனர். 

ஆனால் இந்த தியரி உண்மை யாக இருந்தால் கப்பலில் இறந்து கிடந்தவர்கள் எல்லாம் ஏதோ ஒன்றைப் பார்த்துப் பயந்த படி கண்கள் விரிந்த நிலையில் இறந்து கிடந்தத தற்கான காரணம் தெரிய வில்லை.

தியரி 2 - இயற்கை சீற்றம்

மற்றொரு தியரி இது ஏதேனும் வித்தியாச மான இயற்கை சீற்றமாக இருக்கலாம் எனவும், அதன் காரணமாக இவர்கள் இறந்திருக்க லாம் எனவும் இந்த இயற்கை குளிர் 
இயற்கை சீற்றம்
மற்றும் வெப்பத்தை மாறி மாறி வழங்கியதால் கப்பல் வெடித்திருக் கலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் இதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இப்படி இதற்கு முன்பு நடந்ததும் இல்லை.
தியரி -3 புகுந்து விளையாடிய பேய்

வழக்கம்போல ஏதேனும் விஷயத்திற்குப் பேய் மீது பலி போடுவது போல இந்த விஷயமும் ஏதேனும் பேயின் செயல் தான் எனவும் கூறுகிறார்கள். 
புகுந்து விளையாடிய பேய்
அதனால் தான் பேயைப் பார்த்தது போல எல்லோரும் ஒரு வித பயந்துடனேயே உரைந்த நிலையில் இறந்து கிடந்தார்கள் என்ற கூற்றும் மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது.

தொடரும் மர்மம்

எனினும் இன்று வரை இந்த விபத்து எப்படி நடந்தது. என யாருக்கும் தெரிய வில்லை. இந்த மர்மம் நிறைந்த விபத்து குறித்து மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களும் சொல்லப் படுகிறது. 
தொடரும் மர்மம்
அந்த கப்பலை ஏலியன்கள் தாக்கி யிருக்கலாம் என்றும், சிலர் அந்த கப்பல் பல ஆண்டு களுக்கு முன்பே விபத்தில் சிக்கி யிருக்கலாம். 

ஆனால் குறிப்பிட்ட தகவல் அந்த நேரத்தில் பரவியதால் அப்பொழுது அந்த விபத்து குறித்து நாம் அறிந்திருக் கலாமென கூறுகின்றனர்.
புரியாத புதிர்

அந்த கப்பல் யாருக்குச் சொந்தமானது? அந்த கப்பல் எதற்காகப் பயன் படுத்தப்பட்டது? யார் யார் அந்த பயணத்தின் போது இறந்தார்கள்? 
புரியாத புதிர்
இந்த தகவல் அப்பொழுது வேகமாகப் பரவிய போதும் கூட யாரும் அதற்குச் சொந்தம் கொண்டதற்குக் காரணம் என்ன? 

அந்த கப்பல் எப்படி திடீரென வெடித்தது? உள்ள இருந்தவர்கள் உறைந்த நிலையில் இறந்த காரணம் என்ன? என்பது எல்லாம் இன்றும் மர்மம் தான்.

உங்கள் கருத்து

இந்த எஸ்எஸ் ஓராங் மெடான் கப்பல் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

இந்த கப்பல் விபத்து எப்படி நிகழ்ந்திருக்கும் என உங்களுக்கு என்ன தோன்றுகிறது?  உங்கள் கருத்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 18, April 2025
Privacy and cookie settings