சூரிய கிரகணத்தின் போது வெளியில் வரக் கூடாது, சாப்பிடக் கூடாது என்பது கட்டுக் கதைகள் என்று விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் விளக்கமளித் துள்ளதார்.
திருச்சியில் இந்திய அறிவியல் தொழில் நுட்பத்துறை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் செய்தி யாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், ‘வானியல் அற்புத நிகழ்வான வளைய வடிவ சூரிய கிரகணம் வரும் 26-ம் தேதி நடைபெறுகிறது.
இது கங்கண சூரிய கிரகணம், ரிங் ஆப் பயர் என்றும் சொல்லப் படுகிறது.
இது கங்கண சூரிய கிரகணம், ரிங் ஆப் பயர் என்றும் சொல்லப் படுகிறது.
இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வளைய வடிவ சூரிய கிரகணம் தெரியும்.
தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டம் மணப்பாறை யில் மட்டும் இந்த வளைய வடிவ கிரகணம் அதிக பட்சமாக 9.30 மணி முதல் 9.33 மணி வரை தெரியும்.
தமிழ்நாட்டில் அற்புத சூரிய கிரகணம் வரும் டிசம்பர் 26-ம் தேதி வியாழக்கிழமை காலை 8.07 மணி முதல் காலை 11.16 வரை காணமுடியும்.
அன்றைய தினம் கோவை, ஊட்டி, திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற இடங்களில் வானில் ஒரு அதிசய காட்சியைக் காணமுடியும்.
தீ வளையம் போல சூரியன் அற்புதமாக காட்சி தரும். நெருப்பு வளையம் போல காணப்படும் சூரியனை வளைய வடிவ சூரிய கிரகணம் என்கிறோம். சூரியனை எப்பொழுதும் வெறும் கண்களால் பார்க்கக் கூடாது.
நுண்துளை கேமரா கொண்டோ அல்லது வேறு விதத்திலோ சூரிய பிம்பத்தை திரையில் வீழ்த்தியோ காண்பதில் எவ்வித ஆபத்தும் இல்லை.
அதே நேரத்தில் சூரிய கிரகணத்தின் போது வெளியில் வரக்கூடாது. சாப்பிடக் கூடாது என பலரும் தவறாக கருதுகின்றனர். அப்படி எல்லாம் ஏதுமில்லை. கிரகணம் என்பது நிழல் தான்.
மரத்தின் நிழலில் இருப்பது போல, நிலவின் நிழலில் இருப்பதும் ஒன்று தான். சூரியனை நிலவு மறைத்து அதன் நிழல், பூமியில் விழும் போது அது சூரிய கிரகணம்.
பூமியின் நிழல், முழு நிலவின் மீதும் விழுந்து அது மறைவது சந்திர கிரகணம். இது ஒரு இயற்கை நிகழ்வு.
அரிய நிகழ்வான இந்த நிகழ்வால் பாதிப்பு எதுவுமில்லை. இது குறித்த தவறான கட்டுக் கதைகளை நம்ப வேண்டாம்.
அரிய நிகழ்வான இந்த நிகழ்வால் பாதிப்பு எதுவுமில்லை. இது குறித்த தவறான கட்டுக் கதைகளை நம்ப வேண்டாம்.
உணவு உண்டு, கிரகணத்தை பெரியவர்களும் சிறியவர்களும் கர்ப்பிணிகளும் பார்க்கலாம்.
வெறும் கண்ணாலும், பைனாகுலரில் நேரடியாகவும் கிரகணத்தை பார்க்க கூடாது. இதற்காக உள்ள சூரிய கண்ணாடிகள் மூலம் மட்டுமே பார்க்க வேண்டும்.
திருச்சி அண்ணா அறிவியல் மையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன’என்று தெரிவித்தார்.
Thanks for Your Comments