ஜனாதிபதி பங்கேற்ற பட்டமளிப்பு.. பதக்கத்தை நிராகரித்த மாணவி !

0
புதுவை பல்கலைக் கழகத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.
பதக்கத்தை நிராகரித்த மாணவி


புதுவை பல்கலைகழக த்தின் 27 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.

இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு மாணவர்களு க்கு பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.

முன்னதாக இதழியல் துறையில் முதுநிலை பட்டபடிப்பில் தங்க பதக்கம் வென்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த

இஸ்லாமிய மாணவி ரபியா பட்டமளிப்பு விழாவிற்கு தலையில் ஹீஜாப் அணிந்து வந்தார்.

அப்போது விழா அரங்கத்தி லிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மாணவி ரபியாவை தலையில் அணிந்திருந்த ஹீஜாப்பை அகற்ற கூறினர்.

அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால், அவர் விழா அரங்கத்தி லிருந்து வெளியேற்றப் பட்டார். இதனால் பெரும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்தார் அந்த மாணவி.


தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மாணவர்க ளுக்கு பட்டங்களை வழங்கி விட்டு பல்கலைக் கழகத்தை விட்டு சென்றதும்,

விழா அரங்கிற்கு மாணவி ரபியாவை அழைத்து பட்டத்தையும், தங்க பதக்கத்தையும் வழங்கினர்.

ஆனால் அரங்கத்திற்குள் அனுமதிக்காமல் அவமதித்த தற்கு கடும் எதிர்ப்பை துணைவேந்தரிடம் பதிவு செய்த அந்த மாணவி, தங்க பதக்கத்தை பெறாமல் நிராகரித்தார். பட்டத்தை மட்டும் பெற்றுக் கொண்டு சென்றார்.

ஹிஜாப் அணிந்துவந்த இஸ்லாமிய மாணவிக்கு அனுமதி மறுக்கப் பட்டதும், அவர் தங்கப் பதக்கத்தை நிராகரித்ததும் புதுச்சேரியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.

இந்த மாணவி இதழியல் முதுகலைப் பிரிவில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings