விளையாட்டுத் துறையில் சாமானியர்கள் சாதிப்பதே சவாலானது என்ற நிலையில், மாற்றுத் திறனாளிகள் வாழ்வோ மிகவும் போராட்டம் நிறைந்தது.
அப்படிப்பட்ட போராட்ட குணம் நிறைந்த மாற்றுத் திறனாளியாக திகழ்கிறார் சுபாஷினி.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சின்ன தாண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி - அம்மாசி தம்பதியினரின் மகள் சுபாஷினி.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சின்ன தாண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி - அம்மாசி தம்பதியினரின் மகள் சுபாஷினி.
பிறவிலேயே பார்வை மாற்றுதிறனாளியான இவருக்கு உடன் பிறந்தவர்கள் இருவர்.
அவர்களுக்கும் பார்வை இல்லாததால் மாற்றுத் திறனாளி களுக்கான தங்கும் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.
அவர்களுக்கும் பார்வை இல்லாததால் மாற்றுத் திறனாளி களுக்கான தங்கும் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.
தற்போது கல்லூரி மாணவியாக உள்ள சுபாஷினிக்கு 7-ம் வகுப்பு முதல் ஜூடோ விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தார்
சுபாஷினியின் தந்தைக்கு சிறுநீரகம் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் அவர் வேலைக்கு செல்லாத சூழலில் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார் அவரது தாய் அம்மாசி.
குடும்பத்தில் வறுமை தாண்டவம் ஆடினாலும் மகளின் ஜூடோ ஆசைக்கு அவர் ஒரு போதும் முட்டுக் கட்டையாக இருந்தது இல்லை.
எங்கு போட்டிகள் நடந்தாலும் அதில் பங்கேற்கும் சுபாஷினியை வெற்றித் திருமகள் ஆரக் தழுவிக் கொண்டாள்.
இதன் பலனாக லண்டனில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக் கான காமன்வெல்த் ஜூடோ போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு சுபாஷினிக்கு கிடைத்தது.
இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர் இந்தியாவுக் காக தங்கம் வென்றார்.
ஒலிம்பிக்கில் சாதிக்க வேண்டும் என்பதே சுபாஷினியின் கனவு. ஆனால் குடும்ப சூழல் அதற்கு ஏதுவாக இல்லை என கண்ணீர் விடும் அவர்,
ஒலிம்பிக்கில் சாதிக்க வேண்டும் என்பதே சுபாஷினியின் கனவு. ஆனால் குடும்ப சூழல் அதற்கு ஏதுவாக இல்லை என கண்ணீர் விடும் அவர்,
தமிழக அரசு தனக்கு ஒரு வேலை வழங்கினால் மிகவும் உதவியாக இருக்கும் என்கிறார்.
சாதிப்பதற்கு வறுமையோ, உடல் குறைபாடோ நிச்சயம் தடையில்லை என்பதற்கு சுபாஷினி ஒரு சாலச் சிறந்த உதாரணம்.
காமன்வெல் த்தில் தங்கம் வென்ற சுபாஷினிக்கு ஒலிம்பிக் கனவு கைகூடுமா?
காமன்வெல் த்தில் தங்கம் வென்ற சுபாஷினிக்கு ஒலிம்பிக் கனவு கைகூடுமா?
அவருக்கு அரசு தரப்பில் இருந்து உதவிகள் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Thanks for Your Comments