இனி பி.இ. படித்தவர்களும் ஆசிரியர் தேர்வு எழுதலாம் !

0
பலரது பணிச்சுமையை குறைக்க இயந்திரத்தை உருவாக்கினான் பொறியாளன். ஆனால் இயந்திர பயன்பாடு அதிகரித்து விட்டதால் அந்த பொறியாள னுக்கே இன்று வேலை கிடைப்பது அரிது என்று தான் சொல்ல வேண்டும்.
பி.இ. படித்தவர்களும் ஆசிரியர் தேர்வு எழுதலாம்


உலக அளவில் கல்வித் துறையில் மருத்துவம் மற்றும் பொறியிய லுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது.

பள்ளிப் படிப்பை முடிக்கும் பெரும்பாலான மாணவர்கள் மருத்துவம், பொறியியல் துறைகளையே தேர்ந்தெடுக் கின்றனர்.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக பொறியியல் துறையில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

பட்டப் படிப்பை முடித்த அனேக பொறியாளர்கள் வேறு துறைகளில் கிடைத்த வேலையை செய்து வருகின்றனர். 

தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் வெகுவாக குறைந்துள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2015 - 2016ம் ஆண்டுகளில் பி.எட் கல்லூரிகளில் 20 சதவீதம் இடங்கள் பொறியியல் மாணவர்களு க்கு ஒதுக்கப் பட்டது. ஆனால் மாணவர்கள் அதிகம் சேராததால் 5 சதவீதமாக குறைக்கப் பட்டது. 


பொறியியல் மாணவர்கள் பெரும் பாலானோர் அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், பொறியியல் பட்டப் படிப்பு படித்தவர்கள் இனி டெட் எனும் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதலாம் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

டெட் எனும் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் எழுதி 6 முதல் 8 வகுப்பு களுக்கு கணித ஆசிரியராக லாம் என சமநிலை அந்தஸ்து வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 

பி.இ பட்டப் படிப்புகளில் எந்த பிரிவில் பயின்றிருந் தாலும் இந்த டெட் தேர்வை எழுதலாம் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings