அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் சென்னையில் தான் பணியாற்றிய கல்லூரியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் காரம்பாக்கம் எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஹரி சாந்தி (32).
சுமார் 5 வருடங்களுக்கு முன்பு அரும்பாக்கத்தில் உள்ள டிஜி வைஷ்ணவா பெண்கள் கல்லூரியில் தெலுங்கு பிரிவில் உதவி விரிவுரையாளராக பணிபுரிந்து வந்தார்.
கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் ஆசிரியர் பணிக்கான தேர்வெழுதி அரசு பள்ளி ஆசிரியையாக பணி பெற்று பெரம்பூரில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்திருக்கிறார்.
இந்த நிலையில் அவ்வபோது தன்னுடன் பணியாற்றிய நண்பர்களை பார்ப்பதறக் காக கல்லூரிக்கு வருவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று மாலை கல்லூரிக்கு வந்தவர் தான் பணியாற்றிய தெலுங்கு பிரிவு வகுப்பறைக்கு சென்றுள்ளார்.
இன்று காலை தெலுங்கு பிரிவு துறைத் தலைவர் நட்ராஜ் வகுப்பறையை திறந்து பார்க்கும் போது ஹரி சாந்தி தூக்கில் தொங்கி இறந்திருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் அவர் கொண்டு வந்த கைப்பை, செல்போன் ஆகியவை வகுப்பறையில் இருந்துள்ளது.
ஹரிசாந்தி கல்லூரிக்குள் செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி யுள்ளது. இதனை யடுத்து அரும்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அவரது குடும்பத்தார் களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இறந்து போன ஹரி சாந்திக்கு இன்னும் திருமணமாக வில்லை. சில ஆண்டுகளுக்கு முன் அவரது தந்தை இறந்து விட்டார். தற்போது தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments