திரையரங்கத்துக்கு 20,000 ரூபாய் அபராதம் - அதிக கட்டணம் வசூல் !

0
திருநெல்வேலி யிலுள்ள பாம்பே திரையரங்கத் துக்கு அதிக கட்டணம் வசூல் செய்ததாக 20,100 ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
திரையரங்கத்துக்கு 20,000 ரூபாய் அபராதம்


திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சி புரத்தைச் சேர்ந்த முருகன்,

2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ம் தேதி பாளையங் கோட்டையில் உள்ள பாம்பே தியேட்டரில் படம் பார்த்துள்ளார்.

அவரிடம் பால்கனி டிக்கெட்டுக்கு 150 ரூபாய் வசூலிக்கப் பட்டுள்ளது. 

இந்நிலையில் பால்கனி டிக்கெட்டிற்கு அரசு 50 ரூபாய் நிர்ணயித் துள்ளதாகவும்,

அதனை மீறி பாம்பே திரையரங்கம் வசூலித்துள்ள தாகவும் குற்றம் சாட்டி நுகர்வோர் நீதிமன்றத்தில் முருகன் வழக்கு தொடர்ந்தார்.

பட இடைவேளையின் போது விளம்பரங்களை திரையிட்டு கால விரயத்தை ஏற்படுத்திய தாகவும் முருகன் குற்றம் சாட்டி யிருந்தார். 


வழக்கை விசாரித்த திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றம், முருகனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலு க்கு நஷ்ட ஈடாக 15 ஆயிரம்,

வழக்குச் செலவுக்கு 5 ஆயிரம் என மொத்தம் 20,000 ரூபாய் மனுதாரருக்கு கொடுக்க உத்தர விட்டது. 

மேலும் மனுதாரரிடம் இருந்து கூடுதலாக பெற்ற 100 ரூபாயும் தருமாறு நுகர்வோர் நீதிமன்ற தலைவர் உத்தர விட்டார். 

இந்த தொகையை ஒரு மாத காலத்துக்குள் தரவில்லை எனில் 6 சதவீத வட்டியுடன் சேர்த்து கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings