திரும்பவும் தேனி டாக்டரும் கைலாசத்துக்கு போயிட்டாரா.. பரபரப்பு !

0
திரும்பவும் தேனி டாக்டரை காணவில்லை யாம்.. ரொம்பவும் கஷ்டப்பட்டு ஆசிரமத்தில் இருந்து டாக்டரை மீட்டு வந்த நிலையில், மீண்டும் மாயமாகி இருப்பது பரபரப்பை தந்துள்ளது.. 
திரும்பவும் தேனி டாக்டரும் கைலாசத்துக்கு போயிட்டாரா


ஒருவேளை இவரும் கைலாசத்து க்கு கிளம்பி போய் விட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் காந்தி.. ஓய்வு பெற்ற அரசு மருந்தாளுநர்.. இவரது ஒரே மகன் தான் மனோஜ்குமார்.. 33 வயதாகிறது.. 

இவர் ஒரு அரசு டாக்டர்.. வெள்ளளூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக வேலை பார்த்து வந்தார்.

நித்யானந்தாவின் பரம சீடர்.. போன வருடம் இவர் தன்னுடைய அக்கா மகள் நிவேதாவுடன் திடீரென மாயமானார். 

இதனால் பதறி போன குடும்பத்தினர், இவர்களை தேடி வந்த நிலையில், பிடதியில் இருப்பது தெரிய வந்தது. பின்னர் 2 பேரையும் மீட்க காந்தி அங்கு சென்றார்.. 

ஆனால், ஆசிரம ஊழியர்கள் இவரை அடித்து விரட்டி விட்டதாக தெரிகிறது. அதனால், ஊருக்கு வந்து மகன், பேத்தியை மீட்டு தர வேண்டும் என்று மாவட்ட எஸ்பியிடம் புகார் தந்தார்.. 


பின்னர் தனிப்படை அமைக்கப்பட்டு, 2 பேரும் மீட்கப்பட்டு வந்தனர். மனோஜ் குமாரும், வழக்கம் போல பணியில் போய் சேர்ந்தார்.

திரும்பவும் மனோஜ் ஆசிரமம் பக்கம் போய் விடக்கூடாது என்பதால், வீட்டில் அடிக்கடி அட்வைஸ் தந்து கொண்டே இருந்தனர்.

இப்போது திடீரென எஸ்.ஆகி உள்ளார்.. கொஞ்ச நாளாகவே நித்யானந்தா பற்றி சொந்தக் காரர்களிடம் பேசி வந்துள்ளார்..

அதனால் பதறி போன காந்தி, திரும்பவும் பெரியகுளம் வடகரை ஸ்டேஷனில் புகார் தந்துள்ளார். 

நித்யானந்தா புதிதாக கைலாசா நாட்டை உருவாக்க இருப்பதால், பலரும் அங்கு கிளம்பி செல்ல முயற்சிக்கும் நிலையில், டாக்டரும் அங்கு சென்றிருக்க லாமோ என்ற சந்தேகம் குடும்பத்தின ருக்கு எழுந்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings