தன் குழந்தைகள் உச்சரித்த முதல் வார்த்தையை அம்மாக்கள் என்றைக்கும் மறக்க மாட்டார்கள்.
தவிர, 'என் பிள்ளை முதன் முதலா சொன்ன வார்த்தை இது தான்' என்று தனக்கு நெருங்கி யவர்களிட மெல்லாம் அதைச் சொல்லி சொல்லிப் பூரித்துப் போவார்கள்.
இங்கிலாந்து அரசக் குடும்பத்தின் மூத்த மருமகளான இளவரசி கேட் மிடில்டனும் இதற்கு விதி விலக்கில்லை.
என் குட்டி மகன் லூயிஸ், பேச ஆரம்பித்து விட்டான். நான் எங்கு சென்றாலும் என்கூடவே வருவேன் என்று அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டான் என்று சமீபத்திய பேட்டி யொன்றில் பூரித்திருந்தார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னால், 20 மாதங்களான தன் மகன் முதல் முதலாக உச்சரித்தது யாருடைய பெயரை என்று வெளிப்படுத்தி யிருக்கிறார்.
கேட் மிடில்டன் அதை விவரித்த விதம் ஓர் அழகான கவிதை போல இருக்கிறது. ''லூயிஸ் உச்சரித்த முதல் வார்த்தை 'மேரி'. இந்த மேரி யார் தெரியுமா?.
எங்கள் அரண்மனைக் கிச்சனில் இருக்கிற புக் ஷெல்ஃப் தான் லூயியின் உயரத்துக்கு எட்டும்.
கிட்டத் தட்ட அந்த ஷெல்ஃப் முழுக்க இங்கிலாந்தின் புகழ் பெற்ற சமையல் கலை நிபுணர் மேரி பெர்ரியின் புத்தகங்கள் தான் இருக்கும்.
குழந்தைகளை முகங்கள் சுலபமாக ஈர்த்து விடுகின்றன. மேரி பெர்ரியின் சமையல் புத்தகங்களி லெல்லாம் அவரது முகம் போட்ட அட்டைப் படத்தைப் பார்த்து வந்த லூயிஸ் ஒருநாள்,
அவருடைய படத்தைச் சுட்டிக் காட்டி 'மேரி' என்றான்'' என விவரித்த கேட் மிடில்டன்,
இந்தத் தகவலை, சம்பந்தப்பட்ட சமையல்கலை நிபுணர் மேரி பெர்ரியிடமே நேரில் சொல்லி மகிழ்ந்திருக்கிறார்.
இந்தத் தகவலை, சம்பந்தப்பட்ட சமையல்கலை நிபுணர் மேரி பெர்ரியிடமே நேரில் சொல்லி மகிழ்ந்திருக்கிறார்.
கூடவே, உங்களை நேரில் பார்த்தால் என் மகன் அடையாளம் கண்டு கொள்வான் என்றும் சொல்லி யிருக்கிறார் இளவரசி.
இங்கிலாந்து இளவரசியின் வார்த்தை களால் மகிழ்ச்சியில் திளைத்துப் போன மேரி பெர்ரிக்கு தற்போது 84 வயதாகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி டி.வி சேனல் ஒன்றில் ஷூட் செய்யப்பட்ட சமையல் நிகழ்ச்சியில் தான் இந்த சந்தோஷமான சம்பவம் நடைபெற்றி ருக்கிறது.
இந்தச் சமையல் நிகழ்ச்சியில் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் கேட் மிடில்டன் இருவரும் கலந்து கொண்டார்கள்.
அவர்கள் இருவரும் புறாவைப் போன்ற இணை பிரியாத தம்பதியர். அவர்கள் அருகருகே இருக்கையில் வில்லியம் தன் மனைவியின் கரங்களை ஸ்பரிசித்த படியே இருக்கிறார்.
மனைவி சிரிக்கையில் அவர் முகத்தை விட்டு கண்களை எடுப்பதில்லை இளவரசர்.
இளவரசியும் தன் கணவர் மீது அதே அளவுக்கு காதலுடன் இருக்கிறார்.
அவர்களுடைய காதல் மிக இயல்பாக இருப்பதால், பார்ப்பதற்கு மிக இனிமையாக இருக்கிறது'' என்று இங்கிலாந்து அரசக் குடும்பத்து தம்பதியைக் கொண்டாடி யிருக்கிறார் மேரி பெர்ரி. என்றென்றும் காதல்! விகடன்....
Thanks for Your Comments