இந்தியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் கல்வி உள்பட பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைவது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.
ஆனாலும், அனைத்து தடைகளை யும் தாண்டி அவர்கள் தங்கள் வாழ்க்கை யில் சாதித்த வண்ணம் உள்ளனர்.
கல்வி துறையை பொருத்தவரை மூன்றாம் பாலினத்தவர்களுக் கென்று தனியாக பள்ளிகளோ, கல்லூரிகளோ, பல்கலைக் கழகங்களோ இந்தியாவில் இதுவரை உருவாக்கப் படவில்லை.
இதனால் அவர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வர போதிய வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக உத்தர பிரதேசம் மாநிலம் குஷிநகரில் மூன்றாம் பாலினத்தவர் களுக்கென பிரத்யேகமாக ஒரு பல்கலைக் கழகமே தொடங்கப்பட உள்ளது.
அகில இந்திய மூன்றாம் பாலினத்தவர் களுக்கான கல்வி அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட உள்ள இந்த பல்கலைக் கழகத்தில் முதல் வகுப்பி லிருந்து
முதுகலை பட்டப் படிப்பு வரை வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. பி.எச்.டி. எனப்படும்
முனைவர் பட்டத்துக் கான ஆய்வு படிப்புகளும் இந்த பல்கலைக் கழக்கத்தில் பயிலலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
முனைவர் பட்டத்துக் கான ஆய்வு படிப்புகளும் இந்த பல்கலைக் கழக்கத்தில் பயிலலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
மூன்றாம் பாலினவர்த்தவர் களால் வளர்க்கப்பட்ட இரண்டு குழந்தைகள் வரும் ஜனவரி மாதம் 15-ம் தேதி இங்கு அனுமதிக்கப் படுவார்கள்.
பிப்ரவரி, மார்ச் மாதவாக்கில் இதர வகுப்புகளும் தொடங்கப்படும் என இந்த அறக்கட்டளை யின் தலைவர் கிருஷ்ண மோகன் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
Thanks for Your Comments