புத்தாண்டுக்கு என்ன முடிவு எடுக்கப் போறீங்க !

0
2019 ஆம் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் புத்தாண்டுப் பிறக்கப் போகிறது. இந்த நியூ இயருக்கு என்ன ரிசல்யூஷன் எடுக்கலாம். 
புத்தாண்டுக்கு என்ன முடிவு எடுக்கப் போறீங்க
இந்த 2020ஆம் ஆண்டைச் சிறப்பாக்க கடந்த கால தவறுகளைச் சரி செய்து நம்மை நாமே உயர்த்திக் கொள்வோம்.

இந்த புது வருடம் ஜிம்முக்குப் போகணும், செல்போன் பார்ப்பதைக் குறைக்கணும், குடிக்கக் கூடாது,

காலையில் சீக்கிரம் எழுந்திருக் கணும் இப்படி (வழக்கம் போல) எதாவது ஒரு ரிசல்யூஷன் எடுப்போம். 

அதோடு போன வருஷம் புத்தாண்டின் போது நீங்க எடுத்த ரிசல்யூஷனை எவ்வளவு நாள் செய்திருக் கிறீர்கள் என்று உங்களை நீங்களே ஆராய்ந்துப் பாருங்கள் (நிறையதை செய்திருக்கவே மாட்டோம்).

‌வழக்கமா புது வருடம் நாம் எடுக்கும் பொதுவான ரிசல்யூஷன்கள் இதோ. எல்லோரு க்குமே பணம் சம்பாதிக்கணும் என்ற ஆசை நிறைய இருக்கும். 

சென்னை போன்ற பெரு நகரங்களில் வரவுக்கேற்ற செலவு என்ற நிலையில் தான் இருக்காங்க. அவங்க எல்லோரும் நிறைய நிறைய சம்பாதிச்சு அந்த பணத்தை சேமித்து வச்சிடுங்க.

‌புகை மற்றும் மது பழக்கம் இருந்தா நம்ம குடும்பத்துக் காக அடியோடு நிறுத்தலாம். ‌மறக்காம விடுமுறை நாளில் பைக்குக்கு பெட்ரோல் போட்டு வைக்கலாம்.

‌இன்றைக்குப் பல வீடுகளில் இருக்கும் பெரிய பிரச்சினை எடுத்த பொருட்களை நாம் எடுத்த இடத்தில் வைப்பதில்லை. அதை சரியாகச் செய்தாலே பாதி நேரத்தை மிச்சப் படுத்தலாம்.‌
மன அழுத்தம் இல்லாமல் வேலைப் பார்க்க வேண்டும்.‌ இப்போ பெரு நகரங்களில் பீட்சா பர்கரின் மோகம் அதிகரித்து விட்டது. 

இந்த வருடம் பாஸ்ட் புட் உணவுகளைக் குறைத்துக் கொண்டு சத்தான பாரம்பரிய உணவுகளுக்கு மாற வேண்டும்.‌ அன்றாட நடைப் பயிற்சி அவசியம்.

‌வேலை முடிந்து வீட்டிற்கு வரும் நாம் பிள்ளைகளோடு நேரம் செலவிடுவ தில்லை. அதனால் தினமும் ஒரு மணி நேரமாவது உங்கள் பிள்ளைகளுக் காக ஒதுக்குங்கள். ‌

மாதம் ஒரு முறையாவது குடும்பத்துடன் வெளியே செல்லுங்கள்.‌ வாரம் ஒரு முறையாவது கோவிலுக்குச் செல்லுங்கள். இந்த மாதிரியான ரிசல்யூஷன் களோடு உங்களால் முடிந்தால் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 
வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பதை உங்கள் வீட்டிலும் மெய்யாக் குங்கள். தண்ணீரைச் சேமியுங்கள். உறவுகளோடு உறவாட நேரம் ஒதுக்குங்கள்.

எல்லோரும் இந்த வருடம் என்ன ரிசல்யூஷன் எடுக்கலாம்னு யோசிக்க ஆரம்பிச் சிட்டீங்களா. இந்த வருடம் நீங்க எல்லோரும் நினைச்சது உங்களுக்குக் கிடைக்கணும்னு நானும் உங்களுக் காக இறைவனிடம் பிரார்த்திக் கிறேன்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings