தன்னை அடையாளம் காட்டியது எது? - தஞ்சையில் ஜீவஜோதி !

0
சென்னை, சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு எதிராக நீண்ட நெடிய சட்டப் போராட்டம் நடத்தியவர் ஜீவஜோதி. 
தஞ்சையில் ஜீவஜோதி


தன் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் படுகொலை வழக்கில் நீதியைப் பெறுவதற் காக அவர் நடத்திய போராட்டங்     களுக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவும் உதவி செய்தார். 

தற்போது தஞ்சாவூரில் புதிதாக ஹோட்டல் ஒன்றைத் திறந்த கையோடு தமிழக பா.ஜ.க- விலும் தீவிரமாகச் செயல்பட இருக்கிறார் ஜீவஜோதி.

தஞ்சாவூர் - திருச்சி சாலையில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அருகில் தந்தை ராமசாமியின் பெயரில் அசைவ ஹோட்டல் ஒன்றை நேற்று திறந்துள்ளார் ஜீவஜோதி. 

இந்த நிகழ்வில் தமிழக பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் உட்பட அ.தி.மு.க பிரமுகர்களும் பங்கேற்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய ஜீவஜோதியின் உறவினர்கள், `ராஜகோபால் மீது வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே தஞ்சையில் சிறிய அளவில் மகளிர் தையல் கடை ஒன்றை நடத்தி வந்தார் ஜீவஜோதி. 

அதன்பிறகு மெடிக்கல் காலேஜ் சாலையில் சைவ ஹோட்டல் ஒன்றைத் தொடங்கினார். ஆனால், சில வருடங்களில் அந்த ஹோட்டலை மூடி விட்டார்.
மகளிர் தையல் கடை நடத்திய ஜீவஜோதி


அதன் பிறகு ஜீவா சில்க் பேஷன்ஸ் என்கிற பெயரில் மகளிர் தையலகத்தை விரிவு படுத்தினார். இதில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

அத்துடன் ரஹ்மான் நகரில் தனது மகன் பவின் பெயரில் சிறிய அளவில் அசைவ ஹோட்டல் ஒன்றைத் தொடங்கி நடத்தினார். அதையும் சில மாதங்களு க்கு முன்பு மூடிவிட்டார்.

இதை யடுத்து, இனி ஹோட்டல் திறந்தால் கொஞ்சம் பெரிய அளவில் திறக்க வேண்டும் என்று நினைத்தவர் தற்போது தன் தந்தை ராமசாமி பெயரில் திறந்திருக்கிறார். 

ஜீவஜோதியின் அம்மாவுக்கு விதம் விதமான சமையல் செய்வது என்றால் ரொம்பப் பிடிக்கும். 

அத்துடன் சரவணபவன் ஹோட்டலில் மேலாளராகப் பணிபுரிந்த தனது கணவர் பெயரில் ஹோட்டல் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்பது அவரின் நீண்டநாள் ஆசையாக இருந்தது.
விதமான சமையல் செய்வது பிடிக்கும்


அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் வகையில் கொஞ்சம் பெரிய அளவிலேயே புதிய அசைவ ஹோட்டலைத் திறந்து விட்டார்" என்கின்றனர்.

ஜீவஜோதியிடம் பேசினோம்.``ஒரு பெரிய ஹோட்டல் நடத்த வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. அதற்கான முயற்சி தான் இது. 

தவிர அரசியலுக்கு வந்தால் பொருளாதாரம் என்பது முக்கியம். அதனை யொட்டியே, என் குடும்பத்தினர் கவனித்துக் கொள்ளும் வகையில் புதிய ஹோட்டலைத் தொடங்கி யிருக்கிறேன்.

நிரந்தர வருமானம் வந்து கொண்டிருந்தால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அரசியலில் இறங்கி வேலை செய்யலாம். 

ஹோட்டல் திறப்பு விழாவில் கருப்பு முருகானந்தம் நேரில் வந்து வாழ்த்தியது பெரும் மகிழ்ச்சியை தந்தது" என்றார் உற்சாகத்துடன்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings