8 ஆண்டுகளில் ஜார்கண்ட் முதல்வர்... யார் இவர்?

0
ஜார்கண்ட் மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாகவும், ஆளுங்கட்சி யாகவும் இருந்த பாஜகவை வீழ்த்தி, தனது கூட்டணி வியூகத்தால் பெருவெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்க உள்ளார் ஹேமந்த் சோரன்.
8 ஆண்டுகளில் ஜார்கண்ட் முதல்வர்


ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவரும், காங்கிரஸ் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளருமான ஹேமந்த் சோரன்,

தேர்தலில் பெற்ற பிரமாண்ட வெற்றி காரணமாக அம்மாநில முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். 

இவர் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனரும், 3 முறை முதலமைச்சராக இருந்த சிபு சோரன் மகனாக 1975 ஆம் ஆண்டு பிறந்தார்.

ஹேமந்த் சோரன் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்ததாக அவருக்கு நெருக்க மானவர்கள் தெரிவித்த நிலையில், தான் பள்ளிப் படிப்பு மட்டுமே படித்ததாக வேட்பு மனுவில் குறிப்பிட்டார். 

2005ஆம் ஆண்டு போட்டியிட்ட முதல் தேர்தலில், கட்சியின் அதிருப்தி வேட்பாளரால் ஹேமந்த் தோற்கடிக்கப் பட்டார். எனினும் அவரது மூத்த சகோதரரான துர்கா மறைவை யடுத்து, 2009ஆம் ஆண்டு கட்சியின் முகமாக ஹேமந்த் உருவெடுத்தார். 

2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் ஹேமந்த். 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமைந்த பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் துணை முதலமைச்சர் ஆனார். 


மாநிலத்தின இளம் முதலமைச்சராக 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் பதவியேற்ற ஹேமந்த், 2014ஆம் ஆண்டு டிசம்பர் வரை முதலமைச்சராக நீடித்தார்.

காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள ஆதரவுடன் இந்த அரசு அமைந்தது.

கடந்த ஜனவரி மாதம் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிகளை இணைத்து மெகா கூட்டணி அமைத்த சோரன் மாநில பாஜக அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்தினார்.

மது விற்பனை அதிகரிப்புக்கு எதிர்ப்பு, அரசு பள்ளிகளை இணைத்ததற்கு எதிர்ப்பு, பணி நிரந்தரம் கோரி 70 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்கள் நடத்திய போராட்டத் துக்கான ஆதரவு என ஹேமந்தின் நடவடிக்கைகள் அவருக்கான ஆதரவை பெருக்கின. 

இறுதியில் ஜார்கண்ட் முதலமைச்சராக மீண்டும் பதவி யேற்கும் நிலையை ஹேமந்த் எட்டியுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings